தமாகாவிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ! நாடாளுமன்ற சீட்டை ஜி.கே.வாசன் விற்பதாக சரமாரி குற்றச்சாட்டு
தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கதிர்வேல் திடீரென அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். ஜி.கே. வாசனை கடுமையாக விமர்சித்திருந்தார் கதிர்வேல்.
மக்களவை தேர்தலில் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறது. சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் இவர்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மயிலாடுதுறை, தஞ்சை, ஈரோடு கேட்ட நிலையில் தமாகாவுக்கு ஈரோடு மட்டுமே கிடைத்தது. மயிலாடுதுறை, தஞ்சைக்கு பதிலாக ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதில் ஈரோடு தொகுதியில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் , தூத்துக்குடி தொகுதியில் விஜயசீலன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் தமாகாவிலிருந்து விலகிவிட்டார்.
இதுகுறித்து கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு கதிர்வேல் இரு தினங்களுக்கு முன்பு கடிதம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில் நான் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளாக பயணித்து வந்தேன். பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கியதும் ஜி.கே.வாசனுடன் அரசியலில் பயணித்து வந்தேன்.
நான் ஐஎன்டியூசி தொழிற்சங்கங்களுக்கு தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறேன். தமாகாவை பொருத்தமட்டில் தோற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த காலங்களில் அமைச்சர் பதவி கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டது. மேல்சபை எம்பி பதவி கொடுத்த அதிமுகவுக்கும் துரோகம். இப்படி பதவி கொடுத்த கூட்டணி கட்சிகளுக்கே இவர் துரோகம் செய்து வருகிறார்.
இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் சீட் வாங்கி அதனை அதிக விலைக்கு விற்று வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போதுமக்கள் நலக் கூட்டணியில் தமாகா சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டேன். அந்த கூட்டணியிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது நான்தான்.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். ஆனால் என்னை விட கூடுதலான விலைக்கு கேட்டவருக்கு ஜி.கே.வாசன் சீட்டை விற்றுவிட்டார். இதனால் நான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டேன். நான் ஏன் விலகினேன் என்பதை கட்சித் தலைமைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திவிட்டேன். மேலும் ஜி.கே.வாசனிடம் "இந்த கட்சியில் பயணிக்க விருப்பம் இல்லை, அதனால் விலகிக் கொள்கிறேன்" என கூறிவிட்டேன். இவ்வாறு கதிர்வேல் தெரிவித்தார். கதிர்வேல் கட்சியிலிருந்து விலகிய நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவராக கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபாலை கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications