நான் கற்ற பரம்பரை.. குற்றப் பரம்பரை அல்ல.. தமிழிசை வைரல் டிவிட்!
நான் கற்ற பரம்பரை, குற்றப் பரம்பரை அல்ல என்று தூத்துக்குடியில் போட்டியிடும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: நான் கற்ற பரம்பரை, குற்றப் பரம்பரை அல்ல என்று லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். நேற்று முதல்நாள் தமிழிசை இதற்காக வேட்புமனுதாக்கல் செய்தார்.
தூத்துக்குடியில் திமுக கூட்டணி சார்பாக திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி போட்டியிடுகிறார். இதனால் இப்போதே அங்கு அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது. இவர்களுக்கு இடையில் மிக கடுமையான போட்டி நிலவுகிறது.

என்ன உண்மை
இன்று இவர்கள் இருவரின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. முதலில் இவர்களின் விண்ணப்பங்களில் தவறு இருக்கிறது என்பதால் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் இரண்டு பேரின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழிசை தனது வேட்புமனுவில் சில உண்மைகளை மறைத்துவிட்டார் என்று செய்திகள் வெளியானது.

தாமதம்
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக இருந்ததையும், கணவரின் வருமானம், குற்ற வழக்குகள் குறித்து முக்கிய விஷயங்களையும் தமிழிசை மறைத்து விட்டார் என்று தகவல்கள் வெளியானது. இதனால்தான் அவரின் வேட்புமனு பரிசீலனை செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் 1 மணி நேர இடைவெளிக்கு பின் அவரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

டிவிட்டர் கருத்து
இந்த நிலையில் இதுகுறித்து தமிழிசை டிவிட் செய்து இருக்கிறார். தன் மீது எந்த விதமான குற்றமும் இல்லை என்று கூறி அவர் டிவிட் செய்துள்ளார். என் மீது தேவையில்லாத குற்றம் சுமத்துகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

என்ன டிவிட்
குற்ற வழக்கு இல்லை நான் கற்ற பரம்பரை. குற்றப் பரம்பரை அல்ல. கணவரும் அவ்வாறே. வீண் வதந்தி? தோல்வி பயம்???' என்று தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்து இருந்தார். ஆனால் இந்த டிவிட்டிக்கு எதிர்மறையான விமர்சனங்கள் நிறைய வந்தது. இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் அதை பின் டெலிட் செய்துவிட்டார்.
-
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்யை வீழ்த்த கனிமொழிக்கு பொறுப்பு! ஸ்டாலினின் அசைன்மென்ட்.. அதிரடி அரசியல் திட்டம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு!












Click it and Unblock the Notifications