9 லட்சத்தில் ஒரேஒருவர்.. ஆங்கில மீடியம் படித்து தமிழில் நூற்றுக்கு நூறு! யார் இந்த மாணவி துர்கா?
தூத்துக்குடி: தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அசத்திய திருச்செந்தூர் மாணவி துர்கா, விவசாயம் படிப்பதே தனது விருப்பம் என்று தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளன.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழில் நூற்றுக்கு நூறு
அதில் அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 3,841 பேரும், கணிதத்தில் 2,186 பேரும், சமூக அறிவியலில் 1,009 பேரும், ஆங்கிலத்தில் 45 பேரும், தமிழ் பாடத்தில் ஒரே ஒருவரும் நூறு மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர். குறிப்பாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற முடியாது என்று கூறப்படும் தமிழ் பாடத்தில் 9 லட்சம் பேரில் தனியொருவராக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவி குறித்துதான் இணையம் எங்கும் பேச்சாக உள்ளது.

திருச்செந்தூர் மாணவி துர்கா
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் செல்வகுமார் என்பவரின் மகள் துர்கா. இவர்தான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனியொரு ஆளாக தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்கள் வாங்கி அசத்தி இருக்கிறார். திருச்செந்தூர் காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் துர்காவை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சக மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆங்கில மீடியமில் படித்து சாதனை
இதுகுறித்து பேசியுள்ள அவர், "நமது தாய் மொழி தமிழ். தமிழ் மொழியின் மீது கொண்ட ஆர்வம் காரணமாகவே தமிழை விரும்பி படித்ததாகவும் அதனாலே தமிழில் 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளேன். நான் ஆங்கில மீடியமில்தான் படித்தேன். ஆனால், எனக்கு பிடித்தமான பாடம் தமிழ்தான். இங்கிலீஷ் மீடியம் படிக்கும் மாணவர்களுக்கு தமிழில் ஈடுபாடு இருக்காது என்று சொல்வார்கள்.

சாதித்தது எப்படி?
ஆனால், எங்கள் பள்ளியில் தமிழில் மதிப்பெண் குறைந்துவிடக்கூடாது என்பதால் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் தருவார்கள். எழுத்து, வாசிப்பு, மனன பயிற்சி எடுப்பது முக்கியம். உரைநடையைவிட செய்யுள் கடினம் என மாணவர்கள் நினைக்கின்றனர். சினிமா பாடல்களை மனதில் பதிய வைத்து முனுமுனுப்பதைபோல் செய்யுளில் வரும் மனப்பாட பாடல்களை மனதில் பதிய வைத்தால்போதும். எங்கள் ஆசிரியர் மீண்டும் மீண்டும் தேர்வுகளை நடத்தி எங்களுக்கு பிழைகளை சுட்டிக்காட்டுவார்.

விவசாயம் படிக்க விருப்பம்
தமிழை வரிக்கு வரி தெளிவாக வாசிக்க வேண்டும். பிழை வராத வரை தெளிவாக எழுதிப்பார்க்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் உள்ளது. தமிழை வெறும் மொழிப்பாடமாக மட்டும் பார்க்கக்கூடாது. தமிழை நன்றாக படித்தால் வேலைவாய்ப்புக்கு வழி கிடைக்கும். 12 ஆம் வகுப்பில் நான் கணித அறிவியல் பிரிவை தேர்வு செய்ய உள்ளேன். அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று B.Sc. விவசாயம் படிக்க முடிவு செய்து இருக்கிறேன்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications