திருச்செந்தூர் டூ திருநெல்வேலி.. இன்று முதல் புதிய மாற்றம்.. "ரூட்டை கிளியர்" செய்த சென்னை ஆபீசர்ஸ்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தென் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த ரயில் பாதைகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான ரயில்பாதை சீரமைக்கப்பட்டு இன்று சோதனை ஓட்டம் நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது.. இதனால், தென் தமிழகமே கடுமையான பாதிப்புக்கு ஆளானது.. முக்கியமாக, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு, தனித்தீவாகவே காட்சி தந்தன.. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டன..

Thiruchendur to Tirunelveli repaired railway line 3rd test run today and chennai officials team inspects nellai

கடும் பாதிப்பு: வீடுகளில் மக்கள் தங்க முடியாமல் வெளியேறினர்.. ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதிகளில் வெள்ளம் தண்டவாளத்தை சேதப்படுத்தி வயல் பகுதிக்குள் தூக்கி வீசியது... இதைத்தவிர, தண்டவாளத்தில் அடிப்பகுதியிலிருந்து ஜல்லி கற்கள் மற்றும் மண்ணை அரித்துச்சென்றன.. பல ரயில் பாதைகளில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளங்களும் அந்தரத்தில் தொங்கின.

எனவே, திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. செந்தூர் எக்ஸ்பிரஸ் நெல்லையுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு பிறகு, மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மறுபடியும் தண்டவாளத்தை நிறுவும் பணியில் தீவிரமாக ஈடுபட துவங்கினர்.

பணிகள்: இந்த பணிகள்தான், கடந்த சில நாட்களாகவே நடந்து வந்தது.. இறுதியில், புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை நெல்லைக்கு மீட்டு கொண்டு வந்தனர்.

இப்போது, ஆழ்வார்திருநகரி-நாசரேத் இடையே சேதம் அடைந்த தண்டவாள பகுதிகளை சீரமைக்கும் பணியும் முடிந்துவிட்டது. தண்டவாளங்கள் பொருத்தப்பட்டுவிட்டன.. ரயில் போக்குவரத்துக்கும் பாதை சீராகிவிட்டது.. இதையடுத்து, இன்று டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது..

மின்சார வழித்தடம்: மின்சார வழித்தடமும் சீரமைக்கப்பட்டு, மதுரை ரெயில்வே ஆய்வு குழுவினர் நெல்லை வந்தனர்.. அவர்கள் மின்சார ரெயில் என்ஜின் மூலம் திருச்செந்தூர் நோக்கி நேற்று புறப்பட்டு சென்றனர். அப்போது செல்லும் வழியில், ஸ்ரீவைகுண்டம் நாசரேத் பகுதியில் புதிதாக சீரமைக்கப்பட்ட தண்டவாளம் மற்றும் மின்சார பாதை சரியாக இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து பொறியாளர்கள் குழு, பாதுகாப்பு அதிகாரிகள் இன்று மதியம் நெல்லைக்கு வந்துள்ளனர்.. மின்சார ரெயில் என்ஜின் மூலம் திருநெல்வேலி + திருச்செந்தூர் இடையே பயணித்து ஆய்வுகளை மேற்கொள்ள போகிறார்கள்..

போக்குவரத்து: முக்கியமாக, AC பெட்டிகள் பொருத்தப்பட்ட மின்சார ரயில் என்ஜின் மூலம் பயணித்து திருச்செந்தூருக்கு செல்கிறார்கள்.. ரெயில் பாதை போக்குவரத்துக்கு தயார் என்று ஆய்வில் உறுதியாக தெரியவந்ததும், இன்று இரவு முதலே போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே வட்டாரங்கள் சொல்கின்றன.

அப்படி அனுமதி தந்துவிட்டால், இன்றிரவு எக்ஸ்பிரஸ் ரெயிலும், நாளை காலை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்தும் துவங்கிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள் அதிகாரிகள்.

ரயில் சேவைகள்: இதனிடையே, ரயில் சேவைகளை பகுதியாக ரத்து செய்து, தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில், பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் நாளை பாலக்காட்டில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் திருநெல்வேலியில் சிறிது நேரம் நிறுத்தப்படும்.

அதேபோல், திருச்செந்தூர்- பாலக்காடு எக்ஸ்பிரஸ் இன்று திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+