தூத்துக்குடி சங்கீதாவுக்கு மானமே போச்சு.. கயத்தாறு பெட்ரோல் பங்க் மேனேஜருடன் காதல்! திகைத்த கடம்பூர்
தூத்துக்குடி: தூத்துக்குடி ரோட்டில் பைக்கில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது, எதிரே வந்த கார் படுபயங்கரமாக மோதிவிட்டது.. இதில் பைக்கில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.. இதையடுத்து, போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், விபத்தில் உயிரிழந்தவரின் உடம்பெல்லாம் வெட்டு காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.. என்ன நடந்தது பைக்கில் வந்தவர்களுக்கு? இதுகுறித்து 2 பேரிடம் கயத்தாறு போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
கயத்தாறு அருகே பெட்ரோல் பங்க் மேலாளரை காரால் மோதி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு விபத்து போல் சித்தரிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ளது காப்புலிங்கம்பட்டி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சங்கிலிபாண்டி.. இவருக்கு 29 வயதாகிறது.. மனைவி பெயர் மாரியம்மாள்.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.
பெட்ரோல் பங்க் மேனேஜர்
சங்கிலிபாண்டி கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.. வீட்டிலிருந்து பெட்ரோல் பங்குக்கு தினமும் பைக்கில்தான் செல்வார்.. அப்படித்தான் நேற்று காலையிலும் தன்னுடைய ஊரிலிருந்து பைக்கில் வேலைக்கு கிளம்பி சென்று கொண்டிருந்தார்..
கடம்பூர் ரோட்டில் சென்றபோது, சத்திரப்பட்டி விலக்கு அருகே எதிரில் வந்த கார், திடீரென சங்கிலிபாண்டியின் பைக் மீது பலமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக சங்கிலிப்பாண்டி உயிரிழந்தார்.
இந்த மரணத்தை பார்த்ததுமே, காரை ஓட்டி வந்த 2 பேரும், காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த கயத்தாறு போலீசார் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான், இறந்து கிடந்த சங்கிலிப்பாண்டியின் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.. கார் மோதி இறந்த நபருக்கு எப்படி உடலில் காயங்கள் இருக்கும்? அதிலும் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளதே? என்று சந்தேகம் அடைந்தனர்..
கார் ஓனர் யார்
அதற்கு பிறகே அது திட்டமிட்ட கொலை என்று முடிவானது. உடனே இது தொடர்பான விசாரணையையும் துவங்கினர்.. விபத்தை ஏற்படுத்திய ஆளில்லாத காரின் ஓனர் யார் என்பதை கண்டறிந்தனர்.
இறுதியில், காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த சண்முகராஜன் என்பவருக்கு அந்த கார் சொந்தமானது என தெரியவந்தது... பிறகு, கொலை நடந்த உடனேயே குற்றவாளிகள் நீண்ட தூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால் சம்பவம் நடந்த பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தினார்கள். அப்போது நடுகாட்டில் 2 பேர் பதுங்கியிருப்பது தெரியவந்தது..
நடுகாட்டில் சுற்றி வளைத்த போலீஸ்
அவர்களை பிடிக்க போலீசார் முயன்றபோது, 2 பேருமே தாங்கள் வைத்திருந்த அரிவாள்களை போலீசார் மீது வீசிவிட்டு தப்பித்தார்கள்.. எனினும், அவர்களை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து போலீசார் பிடித்துவிட்டனர்.. அவர்களை கைது செய்து விசாரித்ததில், காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜ், மகாராஜன் என்பது தெரியவந்தது.
இதில், சண்முகராஜ் என்பவரின் மனைவி சங்கீதாவுக்கும், சங்கிலி பாண்டிக்கும், கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.. இந்த விஷயம் வெளியே தெரிந்துவிட்டதால் அவமானம் தாங்காமல், கடந்த வருடம் சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இந்த தற்கொலைக்கு சங்கிலிபாண்டி தான் காரணம் என்று மனஉளைச்சலுக்கு சண்முகராஜ், நண்பர் மகாராஜனுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
விபத்து போல சித்தரிப்பு
ஆனால், இது விபத்து போல தெரியவேண்டும் என்பதற்காக காரில் மோதியிருக்கிறார்.. அப்படியிருந்தும், விபத்தில் படுகாயத்துடன் சங்கிலிபாண்டி தப்பித்து விட்டாராம்.
சங்கிலிப்பாண்டி எங்கே தங்களை காட்டிக் கொடுத்து விடுவாரோ என்ற பயத்தில், தயாராக வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிக்கொன்றதாகவும், விபத்து என போலீசாரை நம்ப வைப்பதற்காக காரை அங்கேயே நிறுத்தி விட்டு ஓடியதாக கைதானவர்கள் வாக்குமூலம் தந்துள்ளார்கள். தொடர்ந்து கைதானவர்களிடம் விசாரணை நடக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications