ஒருதலைக்காதல்.. பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்ட வந்த மாணவிக்கு அரிவாள் வெட்டு இளைஞர் கைது
தூத்துக்குடி: ஒருதலைக்காதல் விவகாரத்தில் தூத்துக்குடி அருகே பிளஸ் 2 பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை வெட்டி காயப்படுத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகாலமாகவே ஒருதலைக்காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன. காதல் ஏற்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசுவது தொடங்கி ஓடும் ரயிலில் தள்ளி கொலை செய்வது கத்தியால் குத்தி கொலை செய்வது போன்ற ஒருதலைக்காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி இன்று பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வந்துள்ளார். அந்த மாணவியை ஒருதலையாக காதலித்த இளைஞர் சோலையப்பன் பள்ளி மாணவியை வழிமறித்துள்ளார். அப்போது மாணவிக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே மாணவியை அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார்.
அரிவாள் வெட்டில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மாணவியை வெட்டி காயப்படுத்திய சோலையப்பனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
ஜெயித்தது தூத்துக்குடியில், நன்றி சொல்வது திருச்செந்தூரிலா.. ஸ்ரீநாத்தை கிண்டல் செய்யும் கட்சிகள் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications