தூத்துக்குடி சாத்தான்குளம்.. இரட்டை கொலை வழக்கில் உதவி ஆய்வாளருக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா
தூத்துக்குடி:சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், உதவி ஆய்வாளர் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று மதுரை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த 2020ல் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி எடுத்த நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து ஆகியோரை கொலை வழக்கில் சிபிஐ கைது செய்து,ஜெயிலில் அடைத்தது.. இது தொடர்பான விசாரணையும் நடத்தப்பட்டது.

மதுரை ஹைகோர்ட்: இந்த வழக்கு மதுரை முதலாவது நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இந்த நிலையில் ரகு கணேஷ் சென்னை மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்..
அந்த மனுவில், "கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் நான் அடைக்கப்பட்டுள்ளேன்.. தந்தை, மகன் இறப்புக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இப்போது, உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருகிறேன். அதனால், எனக்கு ஜாமீன் வழங்கி உத்தர விட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
இன்று வழக்கு: வழக்கை விசாரித்த நீதிபதி கே. முரளிசங்கர் பிறப்பித்த உத்தரவு, மனுதாரரின் மனுவை ஆகஸ்ட் 29ம் தேதி அதாவது இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார். இன்றைய தினம், இந்த வழக்கு விசாரணைக்கு வரஉள்ள நிலையில், உதவி ஆய்வாளர் ரகு கணேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது ரத்தாகுமா? என்பது குறித்து நீதிபதி தீர்ப்பளிக்க உள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications