தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் குற்றவாளி கைதானது எப்படி? எஸ்.பி.மதன் விளக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கில் கொலையாளி கைதானது எப்படி என்பது குறித்து எஸ்பி மதன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விளாத்திக்குளம் வேடநத்தத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அறிவியல் பூர்வமான விசாரணையின் அடிப்படையிலேயே தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

இந்த கொலை நடந்தது முதல் அந்த கிராமத்தைச் சேர்ந்த 900 ஆண்களிடம் விசாரணை நடத்தினோம். இது போன்ற குற்றத்தை அந்த நபர்கள் செய்ய வாய்ப்பிருக்கிறதா என்பதை அங்குள்ள மக்களிடம் விசாரித்து ஃபில்டர் செய்தோம்.
சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் அதை சுற்றியுள்ள இடங்களில் உள்ள 90-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். கைது செய்த நபர் அந்த வழியாக பைக்கில் வந்தார் என்பதற்காக கைது செய்யவில்லை.
அறிவியல் பூர்வமாக ஆதாரங்களை சேகரித்து அது உறுதியானதும் மட்டுமே கைது செய்தோம். யாருடைய அழுத்தத்தின் பேரிலும் யாரோ ஒருவரை கைது செய்யவில்லை. அவர் உண்மையை ஒப்புக் கொண்ட போதிலும் எங்களுக்கு கிடைத்த ஆதாரங்களையும் பொருத்தி பார்த்துதான் கைது செய்தோம்.
என்ன மாதிரியான ஆதாரம் கிடைத்தது என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. மேலும் அந்த சிறுமியின் பெயர், புகைப்படத்தை யாரும் வெளியிடக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த 9 நாட்களாக 150-க்கும் மேற்பட்ட எஸ்ஐக்கள், இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் ஓய்வு எடுக்காமல் இந்த கேஸை நடத்தினர். அவர்களுக்கு பாராட்டுகள்.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். குற்றத்தில் இவருக்கு மட்டும் தொடர்பா இல்லை வேறு யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணைக்கு பிறகே தெரியவரும். கொலையாளிக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தரவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1200 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளனர். அவர்களை எல்லாம் நாங்கள் கண்காணித்துதான் வருகிறோம். கைதான நபருக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை. அவர் எதற்காக வேடநத்தம் வந்தார் போன்ற விவரங்களை தற்போது சொல்ல முடியாது என எஸ்.பி.மதன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற போது அவரம் வீடு திரும்பவில்லை. இதையடுத்து போலீஸாரிடம் புகார் அளித்து தேடிய போது அந்த மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் கொலை வழக்கில் 10 தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த ஊரை சேர்ந்த 5 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (30) என்பவரை போலீஸார் கைது செய்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications