ஜிபி முத்துக்கு என்னாச்சு.. திடீர் தற்கொலை முயற்சி.. திருச்செந்தூர் ஆஸ்பத்திரியில் அனுமதி.. பரபரப்பு
ஜி.பி முத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
தூத்துக்குடி: டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. தற்போது அவர் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிக்டாக் என்றாலே ஜிபி முத்து ரொம்ப ஃபேமஸ்.. ரொம்ப இயல்பாக எதார்த்தமாக இவர் பேசும் நெல்லை பாஷைக்கும் வார்த்தைக்கும் ரசிகர்கள் அதிகம்.

டிக்டாக் நண்பர்களே என்று கூப்பிடும்போதே ரசிகர்கள் அந்த வார்த்தையில் விழுந்துவிடுவார்கள்.. இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர்.. இவரது வீட்டை ஒட்டியே ஒரு மரக்கடையை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது பெரும்பாலான வீடியோக்கள் மரக்கடையில்தான் எடுத்திருப்பார்.. சுருக்கமாக சொல்ல போனால், மரக்கடை பிசினஸ் பார்ட் டைம்தான்.. இந்த டிக்டாக் தான் ஃபுல் டைம் வேலையாக இருக்கும். காலையில் பல் துலக்குவது முதல் இரவு தூங்க செல்லும் வரை இவருக்கு உலகமே டிக்டாக்தான்.
தற்போது டிக்டாக் ஆப்பை தடை செய்துவிட்டதால், அப்போதிருந்தே இவர் சோகமாக இருந்தார்.. அப்போது ஒரு வீடியோ வெளியிட்டு, "ஐயா மோடி அவர்களே, நான் சொல்றேன் கேளுங்க.. இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க.. எனக்கு மனநிலை சரியில்லாமல் போயிட்டு இருக்கு.. என்னன்னே தெரியல, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒன்னுமே சரியில்லை பார்த்துக்கிடுங்க" என்று ஸ்டிரைட்டாக பிரதமருக்கே கண்ணீர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ஜிபி முத்து தற்கொலைக்கு முயன்றதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.. கடந்த சில காலமாகவே தீராத வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.. அதேபோல, மரக்கடையை கவனிக்காமல் இருந்ததால், குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு, அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.
எது உண்மை காரணம் தெரியவில்லை.. இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.. ஆனால், அவர் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது... இந்த திடீர் தற்கொலை முயற்சியால், ஜிபி முத்து ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications