திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.. 3 இடங்களில் சிறப்பு பஸ் நிலையம்! பக்தர்கள் நோட் பண்ணுங்க
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை மறுநாள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக திருச்செந்தூரில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் சாலைகளில் 20,000 பேருந்துகளை நிறுத்தும் செய்யும் அளவிற்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் வருகை தருகிறார்கள்.

திருச்செந்தூர் முருகன் கோவில்
மிகவும் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் நடைபெறாமலேயே இருந்தது. இதையடுத்து தான் 15 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாளை மறுநாள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
வழக்கமாக கும்பாபிஷேக நாட்களில் அதிகளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் திருச்செந்தூரில் பலத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
3 தற்காலிக பேருந்து நிலையங்கள்
இதேபோன்று திருச்செந்தூரிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முருகன் கோயில் குடமுழுக்குக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் சாலைகளில் 20,000 பேருந்துகளை நிறுத்தும் செய்யும் அளவிற்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை சமாளிக்க அரசு சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்
ரூ.300 கோடியில் மெகா திட்ட வளாக பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு கட்டங்களாக திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. இதன்பின்னர் முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 56 அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதியை நேற்று ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நாளை மறுநாள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மகா கும்பாபிஷேகத்தையொட்டி, 12 கால யாகபூஜைகள் கடந்த 1 ஆம் தேதி முதக் கால யாக பூஜையுடன் தொடங்கியது. அதன்படி தினமும் யாக கால பூஜைகள் நடந்து வரும் நிலையில், இன்று 8 ஆம் கால யாக பூஜை நடந்தது. கால 8 மணிக்கு இந்த பூஜை நடந்தது. நிறைஅவி அளித்தல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
சிறப்பு பெரு நன்னீராட்டு
இதேபோல் இன்று மாலை 9 ஆம் கால வேள்வி வழிபாடு நடக்க இருக்கிறது. அதில் நிறைஅவி அளித்தல் நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. நாளை மறுநாள் மகா கும்பாபிஷேகத்தை யொட்டி அன்று காலை 4 மணிக்கு 12-ம் கால வேள்வி வழிபாடு, வேள்வி, மகாநிறை அவி வழிபாடு, மகா தீபாராதனை, யாத்ராதானம், காலை 5.30 மணிக்கு கடம் மூலாலயப் பிரவேசம், 6.15 மணிக்கு விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல், சண்முகர், ஜெயந்தி நாதர், நடராஜர், குமரவிடங்க பெருமான் மற்றும் உள் வெளி பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பெரு நன்னீராட்டு நடக்கிறது.
கும்பாபிஷேக தீர்த்தம்
கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. யாகசாலை பூஜைகள் நடக்கும் மண்டபம் பகுதி மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கிறது. கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது. கும்பாபிஷேக தீர்த்தமானது டிரோன் மற்றும் ஸ்ப்ரிங்கர் மூலம் அனைத்து இடங்களுக்கும் தெளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால், அனைத்து இடங்களிலும் எல்இடிடிவி மூலம் கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிந்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜையில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications