கடலோரத்தில் மண்ணை துளைத்து கொண்டு எழுந்த "சூலாயுதம்".. திருச்செந்தூரில் பக்தர்களுக்கு ஒரே சிலிர்ப்பு

கடல் அரிப்பு: அதேசமயம், இதனிடையே, கடல் அரிப்பு காரணமாக வரலாற்று பொக்கிஷங்கள், திருச்செந்தூரின் கடலோரங்களில் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.. திருச்செந்தூர் கடற்கரை சுற்றிலும் அதிகமான கல் சிலைகள், சிமெண்ட் சிலைகள், மரத்தினால், செய்யப்பட்ட சிலைகள் அதிகமாக தென்பட்டு வருகின்றன..
ஒவ்வொரு சிலைகளும், கடற்கரையில் திடீரென எழுந்து நிற்பதை பார்க்கும்போதெல்லாம் பக்தர்கள் பரவசமாகிறார்கள்..
அந்தவகையில், கடந்த ஒரு மாத காலத்திற்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட சிலைகளும், 4 கல்வெட்டுகளும் தற்போது வரை வெளியே வந்துள்ளது. இநத பழங்கால பொக்கிஷங்கள் அனைத்தையும் தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்களும், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தபடி உள்ளனர்.
வித்தியாசமான தோற்றம்: அந்தக்கால கல்வெட்டுகளும், 200 வருட பழமை வாய்ந்த முனிவர் சிலைகளும், யாளியின் கற்சிலைகளும் வித்தியாசமான தோற்றத்தில் , மண்ணுக்கடியிலிருந்து பொக்கிஷங்கள் தென்படுவது, இணையத்திலும் வைரலாகி வருகிறது.
கடற்கரை மணல்: இந்நிலையில், திருச்செந்தூர் கடற்கரை மணலுக்குள் இருந்து திடீரென சூலாயுதம் வெளிவந்துள்ளது. அதாவது, இன்று கோவில் முன்புள்ள கடற்கரையில் பக்தர்கள் அமர்ந்திருந்தார்கள்.. அப்போது கடற்கரை மணலில் கல் ஒன்று தென்பட்டுள்ளது. அங்கிருந்த பக்தர்கள் அது என்னவென்று தோண்டி பார்த்துள்ளனர். ஆனால், அந்த கல் நீளமாக மண்ணுக்குள் சென்று கொண்டேயிருந்தது.
இதனால், பக்தர்களுக்கு ஆர்வம் அதிகமாயிற்று.. அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அந்த கல் இருந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தனர்.. அப்போதுதான், அந்த கல்லில் சூலாயுதம் செதுக்கப்பட்டிருந்ததை கண்டு, பக்தர்கள் சிலிர்த்து போய்விட்டார்கள்.. உடனே அதை தொட்டு வணங்கி மகிழ்ந்தனர்..சூலாயுதம் : ஏற்கனவே கடற்கரையில் கல்வெட்டுகள் கிடைத்து வந்த நிலையில், இதுவும் ஒரு கல்வெட்டாக இருக்கலாம் என்றுதான் பக்தர்கள் நினைத்தார்கள்.. ஆனால், திடீரென மண்ணை தோண்டியதுமே சூலாயுதம் வெளிவந்ததால், வந்ததால் முருகனை பார்க்க அன்னை பார்வதி சூலாயுத ரூபத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார் என்று பக்தர்கள் மெய்மறந்து வணங்குகிறார்கள்.. இந்த சூலாயுதம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications