கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் உடன் டிடிவி தினகரன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், திருச்செந்தூர் அருகே கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸை சந்தித்து ஆசி பெற்றார்.

Recommended Video

    கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் உடன் டிடிவி தினகரன் சந்திப்பு

    "இயேசு விடுவிக்கிறார்" என்ற பெயரில் ஜெபக்கூட்டங்களை தமிழகம் முழுவதும் புகழ் பெற்றவர் மோகன் சி.லாசரஸ். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நாலுமாவடி ஆகும்.

     TTV Dinakaran meets with Mohan C. Lazarus in thiruchendur

    இங்கு "இயேசு விடுவிக்கிறார்" ஆலயத்தை அமைத்துள்ளார் மோகன் சி.லாசரஸ். இந்நிலையில் இவரை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது தினகரனுக்கு மோகன்.சி.லாசரஸ் நினைவு பரிசை வழங்கினார். இருவரும் ஜெபக்கூடத்தில் சிறிது நேரம் இறைவனை வேண்டி ஜெபம் செய்தனர்.

    கோவில்பட்டி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் மோகன் சி.லாசரஸை திடீரென சந்தித்து பேசியிருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அதிமுக, திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+