சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதால் என்ன சிக்கல்.. தூத்துக்குடி கலெக்டர் விளக்கம்
தூத்துக்குடி: வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் eMigrate (https://emigrate.gov.in) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும் என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார். பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பலரும் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல ஆர்வம்காட்டுகிறார்கள். ஆனால் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு முன்பு, வேலைக்கு சேர்த்துவிடும் நிறுவனம் அரசிடம் பதிவு பெற்றுள்ளதா என்பதை பார்ப்பது இல்லை. அதேபோல் சுற்றுலா விசாவில் சென்று மாட்டிக் கொள்கிறார்கள். இப்படி செய்வதால் என்ன சிக்கல் வரும். அந்தநாட்டு சட்டப்படி வழங்கப்படும் தண்டனை உள்ளிட்ட விவரங்கள் தெரிவது இல்லை.. அந்த நாட்டை ஏமாற்றிய குற்றச்சாட்டுக்கு தண்டனை அல்லது அடிமைத்தனமான வேலை என இரண்டில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக கிடைக்கும்.இதுபற்றி தூத்துக்குடி கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் eMigrate (https://emigrate.gov.in) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும்.
எந்த நிறுவனத்தில் / முதலாளியிடம் வேலை செய்ய இருக்கிறீர்கள் என்பது போன்ற தகவல்களையும் முன்னதாக உறுதி செய்துகொள்வது அவசியமாகும். வேலைக்கான ஒப்பந்தம், விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும்.
வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம் பெறுகின்றன. வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாச்சாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.
அதேநேரத்தில், பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வெளிநாடு பயணிக்கக்கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது, அந்நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும். இது கைது, அபராதம் அல்லது சிறை தண்டனைக்கே வழிவகுக்கும். வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி மையத்தினை தொடர்பு கொள்ளவும்.
[email protected] என்ற மின்னஞ்சல், [email protected], https://nrtamils.tn.gov.in. ஆகிய வலைதளத்தில் ஆய்வு செய்யலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் நபர்கள், குறுக்கு வழிகளை தவிர்த்து, அரசு அமைத்துள்ள சட்டப்பூர்வமான வழியில் செல்லும்போது தான் பாதுகாப்பான வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும்" இவவாறு அதில் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications