வேகம் பத்தல.. வெள்ள நிவாரண பணியில் சுணக்கம்.. தாசில்தார் டிரான்ஸ்பர்.. தூத்துக்குடி கலெக்டர் அதிரடி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் வெள்ள நிவாரண பணிகளில் முறையாக செயல்படாத தாசில்தார் கைலாச குமாரசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதி கனமழையால், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், தென்திருப்பேரை மற்றும் சுற்று வட்டார பகுதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு தனித் தீவுகளாகியுள்ளன. ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்த மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதிகளை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் நாசமாகியுள்ளன. தற்போது நிவாரண முகாம்களில் வசித்து வரும் இப்பகுதி மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீள்வது எப்படி என்ற கவலையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரண பணிகள் அரசால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிக்காக 8 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குதல், சுத்தமான குடிநீர் வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் வெள்ள நிவாரண பணிகளில் முறையாக செயல்படாத தாசில்தார் கைலாச குமாரசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கோபாலகிருஷ்ணனை ஏரல் தாலுகா தாசில்தாராக நியமனம் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications