Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசைப்பட்டு கேட்ட மனைவி.. அள்ளி இறைத்த கணவன்..என்னது, இத்தனை ஆண் நண்பர்களா? தூத்துக்குடி தாய்மாமா வேற

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: யாரிந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்? தூத்துக்குடியில் ஒரு பெண்ணை 2 பேர் சேர்ந்து பழிவாங்கியிருக்கிறார்கள்.. என்ன காரணம்?

தூத்துக்குடி எட்டையபுரம் அருகே உள்ளது முத்தலாபுரம் கோட்டூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் பாலமுருகன்.. இவரது மனைவி சந்தன மாரியம்மாள்.. இருவருமே பட்டதாரிகள் ஆவர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

Tuticorin Instagram wife and why did Thoothukudi police take action against her

சிங்கப்பூர்: இவர்களுக்கு கடந்த 2017-ல் திருமணம் நடந்தது.. பாலமுருகன் சிங்கப்பூரில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார்.. எனவே, கல்யாணம் முடிந்ததுமே, சந்தன மாரியம்மாளையும் தன்னுடன் சிங்கப்பூருக்கு அழைத்து சென்றுவிட்டார்..

அங்கேயே வீடு எடுத்து இந்த தம்பதி தங்கி வந்துள்ளனர்.. இதற்கு பிறகு, 2018-ல் தூத்துக்குடி கிருபை நகரில், ஒரு இடத்தை சொந்தமாக வாங்கிய பாலமுருகன், சந்தன மாரியம்மாளை அந்த வீட்டில் குடியிருக்க செய்துவிட்டு, மறுபடியும் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.. தான் பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் மனைவியிடமே தந்து வந்தார்.. இதைத்தவிர, மனைவி ஆசைப்பட்டார் என்பதற்காக, 10 லட்சம் ரூபாயும், 50 பவுன் நகையும் வாங்கி தந்துள்ளார்.

சந்தன மாரியம்மாள்: ஆனால், சந்தனமாரியம்மாளின் மனமோ தடுமாற துவங்கியது.. இன்ஸ்டாகிராமில் தன்விருப்பப்படி வீடியோக்களை போட ஆரம்பித்தார்.. விதவிதமான போட்டோக்களையும் வெளியிட்டு வந்துள்ளார்.. கடைசியில், பல ஆண் நண்பர்களுடன் சந்தன மாரியம்மாளுக்கு தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், விடுமுறையில், ஒருவருடம் முன்பு ஊருக்கு வந்தார் பாலமுருகன்... திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விடவும், மருத்துவ செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.. அதற்கு சந்தன மாரியம்மாள் பணம் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டாராம்.. இத்தனை நாளும் சம்பாதித்து அனுப்பிய பணம், நகைகள் எல்லாம் எங்கே? என்ன செய்தாய்? என்று கேட்டிருக்கிறார்.. ஆனால், இதற்கு சந்தன மாரியம்மாள் சரியாக பதில் சொல்லவில்லையாம்..

இன்ஸ்டாகிராம்: அப்போதுதான், இன்ஸ்டாகிராமில் மனைவியின் நடத்தையை கண்டு கோபம் கொண்ட பாலமுருகன், எதற்காக இத்தனை ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தாய்? என்று கேட்டு கண்டித்துள்ளார். இதுவே தம்பதிக்குள் தகராறாகவும் வெடித்தது.. இதன்காரணமாகவே, 6 மாதங்களாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாக தெரிகிறது.

Tuticorin Instagram wife and why did Thoothukudi police take action against her

இப்படிப்பட்ட சூழலில்தான், சந்தன மாரியம்மாளின் தாய்மாமன் குறித்த தகவல்கள் வெளிவர துவங்கின.. தன்னுடைய தாய்மாமன் காளிமுத்துவிடமும் இதுபோலவே ஏகப்பட்ட நகைகளை வாங்கி சந்தனமாரியம்மாள் ஏமாற்றிவிட்டாராம்.. இதனால், சந்தன மாரியம்மாளுக்கும், காளிமுத்துக்கும் தகராறு ஏற்பட்டு, காளிமுத்துவை சந்தன மாரியம்மாளின் தம்பி, அரிவாளால் வெட்டிய சம்பமும் அரங்கேறியிருக்கிறது.

தாய்மாமன்: சந்தன மாரியம்மாள் மீது தாய்மாமன் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருந்தாராம்.. அதேபோல, மனைவி மீது பாலமுருகனும் அளவுக்கு அதிகமான பாசத்தை வைத்திருந்தாராம். கடைசியில் 2 பேரையுமே ஏமாற்றிவிட்டதால், இருவருமே நொந்துபோனார்கள்..

சந்தன மாரியம்மாளை இப்படியே விட்டால், பலபேரை ஏமாற்றி நகை, பணம் மோசடி செய்வார் என்பதால், கொன்றுவிடலாம் என்று பாலமுருகனும், சந்தனமாரியம்மாளின் தாய்மாமா காளிமுத்துவும் முடிவு செய்தார்கள்.. அதன்படி, நேற்றுமுன்தினம் டூவீலரில் வந்து கொண்டிருந்த சந்தன மாரியம்மாளை கழுத்திலேயே அரிவாளாலேயே வெட்டி கொன்றார்கள் கணவனும், காளிமுத்துவும்.

தூத்துக்குடி: இதற்கு பிறகு 2 பேரும் தூத்துக்குடி தென்பாகம் போலீசுக்கு சென்று சரணடைந்தனர்... மனைவியை அரிவாளால் வெட்டும்போது, பாலமுருகனுக்கு காயம் ஏற்பட்டதால், போலீசார் பாலமுருகனை தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.. இப்போது கணவன் + தாய்மாமன் இருவரிடமும் விசாரணை நடக்கிறது.

சொந்த தம்பி: ஆண் நண்பர்களுடன் சகவாசகம் காரணமாகத்தான், கணவன் மனைவி கடந்த 6 மாதமாக பிரிந்திருந்தார்களாம்.. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் தாய்மாமன் விவகாரம் வெடித்து கிளம்பியிருக்கிறது... தாய்மாமனிடமும் லட்சக்கணக்கான பணம், நகையை இவர் வாங்கி ஏமாற்றியிருக்கிறாராம்.. இப்போது, இந்த பெண்ணால், கணவன், தாய்மாமன் மட்டுமல்ல, சொந்த தம்பியும் ஜெயில்வரை போய்விட்டார்.. அதேசமயம், அந்த லட்சக்கணக்கான பணம் என்ன ஆனது என்றே கடைசிவரை தெரியவேயில்லையாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+