ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: மேற்காசிய போரால் ஓமன் அருகே தவித்துக்கொண்டு இருக்கும் கப்பலில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த மாலுமி உயிரிழந்தார். 11 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்ப மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து கப்பல் ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். 4 நாட்கள் ஆனதால் சடலம் அழுக தொடங்கியுள்ளதாகவும், குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை வைத்து உடலை பாதுகாத்து வருவதாகவும் வேதனையுடன் சக ஊழியர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால், வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் எடுத்துவர சென்ற நூற்றுக்கணக்கான கப்பல்கள் கடந்த 107 நாட்களாக முடங்கி கிடக்கின்றன.

Tuticorin Sailor Dies Stranded in Oman as Hormuz Crisis Delays Repatriation of Body

இந்திய மாலுமி உயிரிழப்பு

இங்கு 13-க்கும் மேற்பட்ட இந்திய கப்பல்கள் சிக்கியுள்ளன. இங்குள்ள கப்பல்களில் 562 இந்திய மாலுமிகள் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில் ஓமன் நாட்டில் உள்ள டுக்ம் துறைமுகத்தில் நின்றிருந்த எம்டி செலஸ்டியல் என்ற கப்பலில் பணியாற்றிய தமிழக மாலுமி நிஷாந்த் உயிரிழந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சை கிடைக்காததால் தமிழக மாலுமி உயிரிழந்துள்ளார். அவரது உடலை விரைவில் இந்தியா அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்கா- ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால்தான், ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு அங்குள்ள கப்பல்கள் வெளியேறும் நிலை ஏற்படும். இதனால் அவரது உடலை எடுத்து வர முடியாத நிலை உள்ளது. சடலத்தை கப்பல் கேப்டன் எடுத்துவர மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. கப்பலில் சடலத்தை அழுகாமல் பாதுகாக்கும் ஃப்ரீசர் வசதி ஏதும் இல்லை. இதனால், குளிர்ந்த தண்ணீர் பாட்டில்களை நிஷாந்தின் உடல் மீது வைத்துள்ளனர்.

காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

எனினும், அவரது உடல் அழுகத் தொடங்கியுள்ளதாக கப்பல் ஊழியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு கப்பல் ஊழியர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

ஓமனில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஒரு கப்பலில் பணியாற்றிய இந்திய மாலுமி நிஷாந்த் உர்த்தநாதன் உயிரிழந்தார். கடந்த 2 முதல் 3 நாட்களாக அவரது உடலை இந்தியா எடுத்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. மோடி அரசு இதுவரை தேவையான உதவிகளை வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாலுமியின் உடல் சிதைவடையத் தொடங்கிய நிலையில், உடன் இருந்தவர்கள் குளிர்ந்த நீர் பாட்டில்களை பயன்படுத்தி உடலை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தூத்துக்குடியை சேர்ந்தவர்

Tuticorin Sailor Dies Stranded in Oman as Hormuz Crisis Delays Repatriation of Body

இந்திய குடிமக்கள் உயிருடன் இருக்கும்போதும், உயிரிழந்த பிறகும் அரசின் அலட்சியத்தின் விலையைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. நிஷாந்த் உர்த்தநாதனின் உடலை உரிய மரியாதையுடன் விரைவாக இந்தியாவிற்கு கொண்டு வர மோடி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்" என்று பதிவிட்டுள்ளது.

உயிரிழந்த மாலுமி தூத்துக்குடி மாவட்டம், குரூஸ்புரத்தைச் சேர்ந்தவர் நிஷாந்த் உயிர்த்தநாதன் (35). இவரது மனைவி சராபின். இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தையும், 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர். நிஷாந்த், கடந்த 15 ஆண்டுகளாக கப்பல் மாலுமியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஓமன் நாட்டின் ரோமனா நிறுவனத்தின் மூலம் 'எம்.டி. செலிஸ்டியல்'என்ற டேங்கர் கப்பலில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சிகிச்சையும் அளிக்க முடியாத சூழலில், கடந்த 11 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+