என்ன ஸ்டெர்லைட் நிவாரணமா? வாங்க மறுத்து டிரைவரை விரட்டியடித்த இளைஞர்கள்.. தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்களை வாங்க மறுத்த இளைஞர்கள் அதன் வாகன டிரைவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்கள் தென்மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்தது. இதனால் ஆறு, குளம் நிரம்பி வழிந்தன.

மேலும் இயல்பு அளவை விட அதிகளவில் கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
மொத்தம் 30க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் கால்நடைகள் இறந்தன. சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் முக்கிய ஆவணங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. மக்கள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது வெள்ளம் வடிந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வாழ தொடங்கி உள்ளனர்.

மேலும் தமிழக அரசு சார்பில் அதிகப்படியான வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ.6 ஆயிரமும், மற்ற இடங்களில் உள்ள மக்களுக்கு ரூ.1000 நிவாரணமாக அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு சிறப்பு மருத்துவ முகாம்கள், சான்றிதழ்கள் பெறும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் திரேஸ்புரம் மக்களுக்கு சரக்கு வாகனத்தில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து வந்திருப்பதை அறிந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிவாரண பொருட்களை வாங்க மறுத்த நிலையில் அந்த சரக்கு வாகனத்தை திருப்பி அனுப்பி வைத்தனர்.

மேலும் சரக்கு வாகனத்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் டிரைவரிடம், ‛‛கொஞ்சமாவது அறிவு இருக்கா. உனது சகோதரி அல்லது குடும்பத்தில் ஒருவரை சுட்டு கொன்று இருந்தால் இப்படி தான் நடந்து கொள்வாயா? இங்கிருந்து சென்றுவிடு'' எனக்கேள்வி கேட்டு விரட்டினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அப்போது பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இந்த ஆலையை திறக்க அதன் நிர்வாகம் முயன்று வரும் நிலையில் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தூத்துக்குடி திரேஸ்புர மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்களை இளைஞர்கள் வாங்காமல் விரட்டியடித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications