தேமுதிகவுடன் மநீம கூட்டணியா? விஜயகாந்தை சந்திப்பது பற்றி கமல்ஹாசன் மறைமுக பதில்!
தேமுதிக உடனான கூட்டணி குறித்து சென்னை சென்ற பின் பேசுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தேமுதிக உடனான கூட்டணி குறித்து சென்னை சென்ற பின் பேசுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் களத்தில் தற்போது பரபரப்பான தலைவராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாறியுள்ளார். நேற்று திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியது மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அதிமுக, திமுகவை விமர்சிக்கும் மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. இதற்கு தற்போது கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

யார் வேட்பாளர்
தூத்துக்குடியில் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. முக்கியமான நபர்கள் தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்படுவார்கள். கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் எங்கள் கட்சி சார்பாக போட்டியிடலாம். ஆனால் அதற்கான முழு திறமையும், நிறைய தகுதியும் இருக்க வேண்டும்.

முக்கியமான வேட்பாளர்
விருப்ப மனுக்கள் பெறும் முறை எங்களுக்கு பிடித்து இருந்தது. அதனால் அதை பின்பற்றுகிறோம். மக்கள் பாதி வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள். நானும், கட்சியினரும் பாதி வேட்பாளர்களை தேர்வு செய்வோம். மக்களுக்கு நல்லது நினைக்கும் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ரஜினிகாந்த்
எனக்கு வாழ்த்து கூறிய நண்பர் ரஜினிகாந்திற்கு நன்றி. எனக்கு அவர் கூறியது வாழ்த்துதான். அதை ஆதரவாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆதரவு அவர் இனிமேல்தான் தர வேண்டும்.

தேமுதிக கூட்டணி
தேமுதிகவுடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதுவரை நாங்கள் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. சென்னை சென்றபின் இதுகுறித்து பேசுவோம், என்று தேமுதிக உடனான கூட்டணி குறித்து கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications