கவிதாவின் மோகம்.. கணவன், காதலன், கள்ளக்காதலனுக்கு துரோகம்.. எரித்து கொலை.. திருப்பூரில்!
இளம்பெண்ணை எரித்து கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
தூத்துக்குடி: ஏகப்பட்ட ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த கவிதா என்ற இளம்பெண்.. மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர்தான் கவிதா. 30 வயதாகிறது.. கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.. ஆனால், கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு தனியாக பிரிந்து வந்துவிட்டார்.. குழந்தைகளையும் அவரிடமே விட்டுவிட்டார்.
4 வருஷமாக தூத்துக்குடியில் ஒரு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். அங்கேயே ஒரு லாரி ஷெட்டில் அக்கவுண்டன்ட்டாக வேலை பார்த்து வந்தார். அப்போதுதான் எட்வின் என்பவர் பழக்கமானார். காதலும் வளர்ந்தது.. போன வருஷம் கல்யாணமும் செய்து கொண்டனர்.

கருகிய நிலை
இந்நிலையில், 2 நாளைக்கு முன்பு புதிதாக ஒரு வீட்டுக்கு குடியேறி உள்ளனர். நேற்றுமுன் எட்வின் வேலைக்கு சென்றுவிட்டார். விடிந்ததும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருக்கவும், தட்டி தட்டி பார்த்தார்.. கவிதா திறக்கவே இல்லை.. அதனால், ஜன்னல் வழியாக எட்டி பார்த்தால், கவிதா கருகிய நிலையில் விழுந்து கிடந்தார்.

ரத்த காயங்கள்
விஷயம் அறிந்து தாளமுத்துநகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கவிதாவின் கை, கால்களில் ரத்த காயங்கள் இருந்தன.. அடையாளமே தெரியாத வகையில் உடல் எரிந்து போய் இருந்தது.. அந்த வீட்டின் கதவை தனியாக கழற்றி எடுக்கும்படி இருந்தது.. அதனால் கவிதாவை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர்.

பகீர் தகவல்கள்
அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், ஆட்டோ டிரைவர் கருப்பசாமிதான் வீட்டிற்கு வந்து போனதாக சொன்னார்கள். இதையடுத்து கருப்பசாமியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது. அப்போதுதான் பல பகீர் தகவல்களும் வெளியாகின. "கவிதாவுக்கு என்னை தவிர நிறைய ஆண்களுடன் தொடர்பு இருந்தது. சம்பவத்தன்று, இரவு எட்வின் வேலைக்கு போய்விட்டார். கவிதாவும், நானும் தனிமையில் இருந்தோம்.

செல்போன்
அப்போது கவிதாவுக்கு அடிக்கடி போன் வந்து கொண்டே இருந்தது. அதனால் போனை ஆஃப் செய்யும்படி சொன்னேன். ஆனாலும் கவிதா வந்து கொண்டிருந்த போன்களை எடுத்து பேசிக் கொண்டே இருந்தார். இதனால் எனக்கு ஆத்திரம் வந்து அங்கிருந்த ஒரு கட்டையை எடுத்து கவிதாவின் காலிலேயே போட்டேன். இதில் வலி தாங்க முடியாமல் கதறிய கவிதா, அலறி கொண்டு வீட்டை விட்டு வெளியே வர முயற்சிக்கவும், இன்னும் ஆத்திரமாகி கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்.

அலறல்
சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக மண்எண்ணையை எடுத்து கவிதாவின் உடலில் ஊற்றி தீவைத்து எரித்தேன்" என்றார். இதையடுத்து, கருப்பசாமி கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் முடிவு வந்த பின்னர் தான் கவிதாவின் மரணத்துக்கான முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications