Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூரிய சக்தியில் மின் உற்பத்தி.. 2 மெகா புராஜெட்.. ஸ்டாலின் ஆட்சியில் உருமாறிய உத்திரமேரூர்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: திமுகவின் கோட்டை என்று உத்திரமேரூர் தொகுதியைச் சொல்லலாம். ஏறக்குறைய 5 முறைக்கு மேல் திமுகவை சேர்ந்தா க.சுந்தர் சட்டமன்ற உறுப்பினராக இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த முறை அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும்கூட, இந்தத் தொகுதி திமுகவின் வசம்தான் இருந்தது.

விவசாயம், வணிகம், தொழிற்சாலைகள் எனப் பன்முகத் தன்மை கொண்ட தொகுதிதான் உத்திரமேரூர். சென்னையிலிருந்து குறைந்த தொலைதூரத்தில் உத்திரமேரூர் இருப்பதால், எதிர்பார்ப்பைவிட மிக அதிக அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது.

 uthiramerur assembly constituency is self-sufficient in electricity

திமுக கோட்டையான உத்திரமேரூர்:

ஆகவே, அதிக அளவுக்காக மின் தேவையை எதிர்பார்த்துள்ளது உத்திரமேரூர். இது குறித்து உதவி செயற்பொறியாளர் ஒருவர், "உத்திரமேரூர் மின்துறை சார்ந்து மொத்தம் 5 பிரிகள் உள்ளன. இந்த மூன்று பிரிவுகளிலும் கடந்த 2 ஆண்டுக்கால ஆட்சியில் குறைந்த மின் அழுத்தப் பிரச்சனையே வராமல் இருப்பதற்காக இதுவரை 52 டிரான்ஸ்ஃபார்மர்கள் போட்டுள்ளோம். இதனால் சீரான மின்சாரம் என்பது தடைப்படாமல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மின்மாற்றிகள் வைத்தபிறகு டிம் சப்ளை என்பதே இல்லாமல் ஒழிக்கப்பட்டுள்ளது.

 uthiramerur assembly constituency is self-sufficient in electricity

அதேபோல வசந்தம் நகர் பகுதியில் ஓவர் லோட் பிரச்சினையால் அடிக்கடி ஃபியூஸ் போய்க் கொண்டிருந்தது. பல காலமாக அந்தப் பிரச்சினை இருந்துவந்தது. அதற்கு என்ன காரணம் என்ன? என்பதை ஆராய்ந்து, தனியாக ஒரு 63கேவி டிரான்ஸ்ஃபார் போட்டுக் கொடுத்தோம். அதனால் அடிக்கடி உயர் அழுத்தப் பிரச்சினையால் ஃபியூஸ் போவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து தம்மனூர், அவலூர் பகுதிகளில் மட்டும் 16 டிரான்ஸ்ஃபார்மர்கள் போடப்பட்டிருந்தது. அந்தப் பகுதிக்குள் வரும் அண்ணாநகர் அதிக குடியிருப்புகள் உள்ளது. அங்கும் அடிக்கடி ஃபியூஸ் போவதாகப் புகார் வந்தது. ஆகவே அந்த சப்ளையை பிரித்து தனியாக ஒரு 63 கேவி மின்மாற்றி போட்டு, அழுத்தம் ஏற்படாமல் குறைத்தோம். அதனால் இப்போது எந்தப் பாதிப்பும் இல்லாமல் நுகர்வோர் உள்ளனர்" என்கிறார்

 uthiramerur assembly constituency is self-sufficient in electricity

இந்த ஆட்சி வந்த பிறகு இத்தனை மாற்றங்கள் செய்திருப்பது மட்டும் சிறப்பு இல்லை. இந்த உபகரணங்கள் சரியான அளவில் பாதுகாப்பதற்காக மாதம் ஒருமுறை shutdown என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிறிய அளவிலேயே பழுதுகள் கண்டுபிடிக்கப்பட்டு, பெரிய அளவிலான செலவுகள் தடுக்கப்பட்டுள்ளன.

"கிட்டத்தட்ட 40வருடங்களுக்கு முன்னால் போட்ட டிரான்ஸ்ஃபார்மரில் இருந்துதான் குடியிருப்புகளுக்கும் விவசாயத்திற்கும் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால் வீடுகளுக்குத் தேவையான அழுத்தத்தில் மின்சாரம் கிடக்காமலிருந்தது. குறைந்த மின் அழுத்தம் அடிக்கடி ஏற்படுவதால், மிக்சி, கிரைண்டர் போன்ற சாதனங்கள் பழுதாகிவிடும் நிலை நீடித்தது.

சீரான மின் சேவை; தடையற்ற மின்சாரம்:

 uthiramerur assembly constituency is self-sufficient in electricity

ஆகவே சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தரிடம் சென்று புகார் செய்தோம். கடந்த ஆட்சியில் அவரால் செய்துதர முடியவில்லை. அவர் எவ்வளவோ முறை முறையிட்டும் கடந்த அதிமுக ஆட்சி காதில் போட்டுக் கொள்ளவில்லை. இப்போது மீண்டும் திமுக ஆட்சி வந்ததும் ஒரே வருடத்தில் பிரச்சினையைச் சரி செய்து கொடுத்துவிட்டார்.

இப்போது விவசாயத்திற்குத் தனியாக மின்மாற்றி போட்டுள்ளனர். ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு மின்மாற்றியை வைத்துக் கொடுத்துள்ளார். இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சீரான மின்சாரம் கிடைத்துவருகிறது. அதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தருக்கும் நன்றி" என்கிறார் ஊர் பெரியவர் ஒருவர்

 uthiramerur assembly constituency is self-sufficient in electricity

"இந்தத் தொகுதி பிரச்சினைகளை உடனடியாக களைய வாட்ஸ் அப் குழு பல செயல்படுகின்றன. சட்டமன்ற உறுப்பினருக்கு ஒன்று, மின்துறைக்கு ஒன்று, மின்னகத்திற்கு ஒன்று எனப் பல குழுக்கள் உள்ளன. பொதுமக்கள் தங்களின் புகாரை எந்தக் குழுவுக்கு வந்தாலும் அத்தனையும் என் பார்வைக்கு இறுதியாக வந்துவிடும். அதை உரியப் பகுதி அதிகாரிகளுக்கு அனுப்பி எத்தனை மணிநேரத்திற்குள் புகார் சீர்செய்யப்பட்டது என்பதைக்கூட நாங்கள் கண்காணித்து எழுதி வைக்கிறோம். அனைத்திற்கும் முறையான தரவுகள் இருக்கின்றன.

எந்தக் காலதாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுப்பதே இறுதி குறிக்கோள்" என்கிறார் இந்தத் தொகுதி மண்டல அதிகாரி.யாக என்னை நியமித்துள்ளார்.

 uthiramerur assembly constituency is self-sufficient in electricity

இந்தத் தொகுதிக்காக புதியதாக இரண்டு துணைமின் நிலையங்கள் அமைப்பதற்காக இடங்களை அதிகாரிகள் கையகப்படுத்தி உள்ளனர். அந்தப் பகுதியில் உரிய மின்நிலையம் அமைக்கும் வேலைகள் தொடங்க உள்ளன. இத்தனை மாற்றங்களையும் இத்தொகுதி கடந்த 2 ஆண்டுகளில் பெற்றுள்ளது. அதேபோல 33 கேவி சப் ஸ்டேஷன் 110 கேவியாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

வாலாஜாபாத் வட்டாரத்தில் அதிகமாகத் தொழிற்சாலைகள் உள்ளன. ஆகவே அந்தப் பகுதிக்குத் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. யாரேனும் தொழில் தொடங்குவதற்காக மின் இணைப்புக் கேட்டுவந்தால் முடிந்தவரை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சூரியசக்தியில் 2 மெகா புராஜெட்:

 uthiramerur assembly constituency is self-sufficient in electricity

இந்தத் தொழிற்சாலைகளை மின் தேவையைப் பராமரிப்பதற்காகவே 22 டிரான்ஸ்ஃபார்மர்கள் போடப்பட்டுள்ளன. இப்படிக் கடந்த ஒரு ஆண்டுகளில் மட்டும் 90 டிரான்ஸ்ஃபார்மர்கள் புதியதாக இந்த ஆட்சிக்காலத்தில் போடப்பட்டுள்ளன. குருவிமலை, இளையனார் நகர் பகுதிகளில் கூட தனித்தனியே ஒரு துணை மின்நிலையம் அமைக்க உள்ளனர்.

கடந்த ஆண்டு வந்த வடகிழக்கு பருவமழையால் பல மின் கம்பங்கள் கீழே விழுந்துவிட்டன. ஆற்றில் அதிக வெள்ளம் வந்ததால், ஆற்றுப் பகுதியிலிருந்த மின் கம்பங்கள் விழுந்து சேதமாகின. அதனால் மின் சேவை பாதிக்கப்பட்டது. உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாற்றுப் பாதைகளில் மின் சேவை வழங்கப்பட்டது. ஆகவே பொதுமக்கள் பாதிப்பு அதிகம் இல்லாமல் காப்பாற்றப்பட்டனர்.

இத்தொகுதியில் புதியதாகச் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க ஒரு ப்ளாண்ட் போடப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு போட உள்ளனர். இந்த சூரிய மின் ஒளி உற்பத்திக்காக 19 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அன்னாத்தூர் பகுதியில் 32 ஏக்கர் நிலம் எடுக்க உள்ளனர்.

இதனால் கோடைக்காலங்களில் கூடுதல் மின் உற்பத்தியைச் செய்ய முடியும். அதேபோல் தேவையையும் சரியாகச் சமாளிக்க முடியும்.

இந்த ஆண்டு கோடையில் அதிக அளவில் மின் தேவை இருந்து வருகிறது. அது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிகூட சில விளக்கங்களை அளித்துள்ளார். அவர், "தமிழ்நாட்டின் மின் தேவை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஏறக்குறைய ஒரே நாளில் 19 ஆயிரம் 'மெகாவாட்' அளவுக்கு உச்சபட்சமாக மின் நுகர்வு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த டிசம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டு, இறுதி செய்யப்பட்டுக் குறைந்த புள்ளியில் குறுகியகால தேவைக்காக ரூ 8.50க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் மட்டும் அரசுக்கு 1312 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் முழுக் காரணம்" என்கிறார்

ஸ்டாலின் ஆட்சியில் ஒளிரும் தமிழ்நாடு:

உத்திரமேரூர் மாற்றங்கள் பற்றி சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் என்ன சொல்கிறார்? பேசினோம். அவர், "முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் கீழ் தமிழ்நாடு ஒளிமிகு மாநிலமாக ஒளிர்ந்து கொண்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பல்வேறு புதிய டிரான்ஸ்ஃபார்மர்கள் அமைத்துக் கொடுத்துள்ளோம். 1989இல் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த போதுதான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். அது இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திட்டமாக அமைந்தது.

அன்றைய காலத்தில் ஏறக்குறை 12 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அவர் வழங்கினார். அது மாபெரும் சாதனையாகப் பேசப்பட்டது. அவரைத் தொடர்ந்து இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின், ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பை வழங்கி சாதனை செய்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக இணைப்பே கிடைக்காமல் காத்திருந்த விவசாயிகள் இன்று மகிழ்ந்துள்ளனர். எங்கள் உத்திரமேரூர் தொகுதிக்கு மட்டும் 474 இணைப்புகள் புதியதாகக் கிடைத்துள்ளது" என்கிறார்.

உத்திரமேரூர் இனி வருங்காலத்தில் மின் சேவையில் மட்டும் அல்ல; சூரிய ஒளி மின் உற்பத்தியிலும் கொடிகட்டிப் பறக்க உள்ளது என்பது மிகமிக அழுத்திக் கூற வேண்டிய செய்தி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+