சுடுகாட்டில் வைத்து.. 12 வயது சிறுமியை.. பிணத்தின் உடையை எடுத்து போர்த்தி கொண்டு ஓடி வந்த கொடுமை!
12 வயது சிறுமியை தூக்கி சென்று சீரழித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்
வேலூர்: சுடுகாட்டிற்கு தூக்கி சென்று 12 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து நாசம் செய்துள்ளனர்.. நிர்வாண நிலையில் கிடந்த சிறுமி, கடைசியில் சுடுகாட்டில் பிணத்துக்கு போர்த்தப்பட்டிருந்த ஒரு துணியை உடம்பில் சுற்றி தட்டு தடுமாறி வீடு வந்து சேர்ந்துள்ள இந்த சம்பவம் மக்களை பெருமளவு உலுக்கி எடுத்து வருகிறது!
வாணியம்பாடி : வாணியம்பாடியில், ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை, கூட்டு பலாத்காரம் செய்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சிறுமிக்கு 12 வயது.. 6-ம் வகுப்பு படிக்கிறார்.. பெற்றோர் இல்லை.. காப்பாளர் ஒருவரின் உதவியில் தங்கி படித்து வருகிறார்... இந்த வீட்டில் பாத்ரூம் இல்லை... அதனால் கழிப்பிட வசதிக்காக ஆற்றங்கரையோரம்தான் வரவேண்டும்.
அதனால், கடந்த 6ம் தேதி சாயங்காலம் 6.30 மணிக்கு பாலாற்று கரையோரம் பாத்ரூம் சென்றுள்ளார்.. அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த சந்துரு 24, பார்த்திபன் 21, கண்ணன் 30 ஆகியோர் ஒன்றாக உட்கார்ந்து தண்ணி அடித்து கொண்டிருந்து இருக்கிறார்கள்.
சிறுமியை பார்த்ததும் 3 பேருமே வாயை பொத்தி, சுடுகாட்டு பகுதிக்கு தூக்கி சென்றுள்ளனர்.. மாறி மாறி பலாத்காரமும் செய்துள்ளனர்.. அந்த சமயத்தில் சிறுமி அலறி கத்தி இருக்கிறார்.. உடனே அவர்கள் கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்துள்ளனர்... உடைந்த பாட்டிலை சிறுமியிடம் காட்டி, கத்தினால் குத்திவிடுவோம் என்று மிரட்டி.. அதன்பிறகும் பலாத்காரம் செய்துள்ளனர்.
இறுதியில் அவர்கள் தப்பி ஓடியநிலையில், சுதாரித்து எழுந்து, தட்டு தடுமாறி சுடுகாட்டில் வழி தெரியாமல் அழுதுள்ளார் சிறுமி... அங்கே மயானத்தின் சடலத்தின் மீது போர்த்தி வீசப்பட்ட துணிகளில் இருந்து ஒன்றை எடுத்து உடம்பில் சுற்றி கொண்டு.. அழுதுகொண்டே அந்த ராத்திரி நேரத்தில் வீடு வந்து சேர்ந்திருக்கிறார்... நடந்த சம்பவத்தை காப்பாளரிடம் சொல்லவும், அவரோ இதை கேட்டு பயந்துபோய், வெளியில் சொல்லாமல் மறைத்துள்ளார்.
எனினும் இந்த குழந்தையின் நிலைமை வேறு யாருக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சிறுமியின் சொந்தக்காரரே ஒருவர் வாணியம்பாடி தாலுகா போலீசுக்கு புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அந்த காமுகர்கள் சந்துரு, பார்த்திபன், கண்ணன் 3 பேரையும் போக்சோவில் இப்போது கைது செய்துள்ளனர். தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களையும் இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications