கறி விருந்து கொடுத்து.. காட்டு பகுதியில் வைத்து.. கழுத்தை நெரித்து..ரேவதியின் கோர முடிவு...!

பெண்ணை கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: கறி விருந்து வைத்து... காட்டுப்பகுதிக்கு ரேவதியை அழைத்து சென்று.. கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர் உறவினர்கள் 2பேர்.. நகைக்காக நடந்த இந்த கொலையில் குற்றவாளிகள் 2 பேருமே கைதாகி உள்ளனர்.

ஆம்பூர் அருகே உள்ளது சுட்டகுண்டா என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் ரேவதி.. 24 வயதாகிறது.. 4 வருஷங்களுக்கு முன்பு இவருக்கு கல்யாணம் ஆனது.. ஆனால் கணவரை பிரிந்து அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் 3 மாதத்துக்கு முன்பு ரேவதிக்கு கர்நாடக மாநிலம் கேஜிஎப் பகுதியை சேர்ந்த மகே‌‌ஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. மகே‌‌ஷ் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேட் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.. அதனால், ரேவதி சில நாட்களுக்கு முன்பு சுட்டகுண்டாவில் உள்ள தன் வீட்டிற்கு வந்தார்.

செல்போன்

செல்போன்

இவரது வீடு இருக்கும் பகுதியில் செல்போன் டவர் கிடைப்பதில்லை.. அதனால் கொஞ்சம் தூரமாக சென்றுதான் பேச வேண்டும்.. அப்படித்தான், சம்பவத்தன்று கணவனுடன் செல்போனில் பேச வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு வீட்டுக்கு திரும்பி வரவே இல்லை.. இதனால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.

காயங்கள்

காயங்கள்

அப்போதுதான் அதே ஊரில் காட்டுப்பகுதியில், சுண்டக்காபாறை என்ற இடத்தில் ரேவதி பிணமாக கிடந்தார்.. அவரது கழுத்தில் காயங்கள் இருந்தன.. கழுத்தில் இருந்த 10 பவுன் நகையும் காணோம்.. செல்போனும் காணோம். இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கை விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போதுதான், ரேவதியின் உறவினர்கள் செல்வராஜ், சித்ரா, ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

நகை பறிப்பு

நகை பறிப்பு

சம்பவத்தன்று, இவர்கள் இருவரும் செல்போனில் பேசி கொண்டிருந்த ரேவதியை ஏமாற்றி காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அங்கு அவரது கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, ரேவதியின் கழுத்தில் கிடந்த நகையையும் பறித்து கொண்டு தப்பி உள்ளனர்.

கறி விருந்து

கறி விருந்து

அதுமட்டுமில்லை.. கொலை செய்வதற்கு முன்பு சித்ரா, ரேவதிக்கு வீட்டில் கறி விருந்து வைத்துள்ளார்.. சாப்பிட்டு முடித்தபிறகு, போன் பேச மலைப்பகுதிக்கு செல்வதாகவும் சொல்லிவிட்டு கிளம்பி உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திதான் சித்ராவும், செல்வராஜும் பின்னாடியே சென்று கொன்று நகையை பறித்துள்ளனர். இவ்வளவும் வாக்குமூலமாக பெற்ற போலீசார் 2 பேரையும் கைது செய்துள்ளனர். H

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+