அமைச்சர் துரைமுருகன் வீட்டில் 2 கதவுகள் உடைப்பு.. கத்தி, உளியால் உடைத்து அமலாக்கத்துறை அதிரடி சோதனை
வேலூர்: தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது சாவி இல்லாததால் 2 கதவுகளை கத்தி மற்றும் உளி உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் உடைத்து சோதனை மேற்கொண்டு வரும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
திமுக மூத்த தலைவர்களில் முன்னிலையில் உள்ளவர் துரை முருகன். திமுகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவர் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் திமுக எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் இன்று துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது துரை முருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் களமிறங்கினார். அப்போது துரை முருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான கிடங்கில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இன்று அமலாக்கத்துறை சோதனை தொடங்கியது.
அதன்படி வேலூர் காட்பாடி, காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரின் வீடுகளுக்குள் இன்று காலையில் சிஆர்பிஎஃப் போலீசாரின் உதவியுடன் அமலாக்கத்துறையினர் விரைந்தனர். வீட்டில் யாரும் இல்லாதத நிலையில் 5 மணிநேரம் காத்திருந்து மதியம் முதல் சோதனையை தொடங்கினர்.
இந்நிலையில் தான் இன்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து வீட்டுக்குள் கடப்பாரை, கத்தி, உளி உள்ளிட்டவற்றை 2 பேர் எடுத்து சென்றனர். இதில் முருகன் என்பவரின் உதவியுடன் கத்தி, உளி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அமலாக்கத்துறையினர் 2 கதவுகளை உடைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த 2 கதவுகளின் சாவி அங்கு இல்லை. இதனால் அங்கு ஏதேனும் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் உளி, கத்தியால் 2 கதவுகளை உடைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதனை கத்தி, உளி உள்ளிட்டவற்றால் 2 கதவை உடைத்து கொடுத்த முருகன் என்பவர் பத்திரிகையாளர்களிடம் கூறினார். இது துரைமுருகன் ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications