குகைக்குள் உல்லாசம்.. கழுத்தில் கிடந்த துண்டை இழுத்து போட்டு.. வெலவெலத்து போன வேலூர்..!
வேலூர் அருகே 55 வயது பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
வேலூர்: மலையில் உள்ள குகைக்குள் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலமும், அதையொட்டி நடந்த மரணமும் வேலூர் மாவட்ட மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு... 42 வயதாகிறது.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி.. கல்யாணமாகி மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்குமே கல்யாணமாகிவிட்டது..
அன்பு கட்டிட தொழிலாளி என்பதால் பல இடங்களில் வேலை பார்த்து வந்தார்.. அப்போது அறிமுகமானவர்தான் வத்சலா.. வேலூர் அடுத்த கருகம்பத்தூரை சேர்ந்தவர்.. கணவனை இழந்த பெண் இவர்.. ஒரே ஒரு மகள் இருக்கிறார்.. அவருக்கும் கல்யாணமாகிவிட்டது.

பழக்கம்
வயிற்று பிழைப்புக்காக வத்சலாவும் கட்டிட வேலைக்கு வரும்போதுதான் அன்பு பழக்கமானார்.. உடனே நட்பு காதலானது... காதல் தீவிரமான கள்ளக்காதலாகி உள்ளது.. இருவரும் பல முறை பல இடங்களில் ஜாலியாக இருந்துள்ளனர்.

வத்சலா
இந்நிலையில், கடந்த 7-ம் தேதியில் இருந்து வத்சலாவை காணவில்லை.. அதனால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்து, வேலூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணையை நடத்தி வந்தனர்.

பெண் பிணம்
அப்போதுதான், வள்ளிமலை மலை மீதுள்ள சமணர் குகையின் அருகே ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. அதனடிப்படையில் அங்கு சென்று பார்த்தால், அந்த சடலம் அழுகி கிடந்தது.. விசாரணையில் அது காணாமல் போன வத்சலா என்பது தெரியவந்தது.. வத்சலாவுக்கு 55 வயசாகிறதாம்.. தொடர்ந்து விசாரணையை போலீசார் கையில எடுத்தனர்.. அப்போதுதான் அன்பு பெயர் அடிபட்டது.

வாக்குமூலம்
அவரிடம் விசாரணை நடத்தியபோது, பல பகீர் தகவல்களை தெரிவித்தார்.. கடந்த 7-ம் தேதி வத்சலாவை வள்ளிமலைக்கு அழைத்து சென்றாராம்.. குகைக்குள் ஜாலியாக இருந்தாராம்.. பிறகு கழுத்தில் கிடந்த துண்டால் வத்சலாவின் கழுத்தை நெறித்து கொன்று விட்டாராம்.. இதற்கு காரணம், தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி விதவை பெண் மேஸ்திரி அன்புவை கட்டாயப்படுத்தி வந்ததுதானாம்.

விசாரணை
இந்த வாக்குமூலத்தை அடுத்து, மேல்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து அன்புவை கைது செய்தனர்... வத்சலாவின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அந்த மலை மேலேயே போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது.. இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தையே வெலவெலக்க செய்துவிட்டது!
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications