அதெப்படி திமிங்கலம்.. பரீட்சையே எழுதாமல் தேர்ச்சி.. வேலூரில் 10 வகுப்பு தேர்வு முடிவில் விசித்திரம்
வேலூர்: வேலூரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் செய்முறை தேர்வு எழுதிய மாணவி தேர்வு எழுதவே இல்லை என்று வந்ததால் தோல்வி அடைந்துள்ளார். அதேநேரம் பள்ளிக்கே வராமல் தேர்வே எழுதாத மாணவன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு செய்முறை தேர்வு எழுதிய மாணவி தோல்வியடைந்ததாகவும், பள்ளிக்கே வராத மாணவர் தேர்ச்சி பெற்றதாகவும் முடிவு வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் எம்.ஜி.ஆர். நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 57 பேர் தேர்வு எழுதினர். இதில் 33 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.. இப்பள்ளியில் படித்த மாணவி வைஷ்ணவி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அறிவியல் பாடத்திற்கு செய்முறை தேர்வு எழுதியிருந்தார். இதற்கு 100 மதிப்பெண்களுக்கு 25 மதிப்பெண்கள் என பள்ளி சார்பில் போட்டிருக்கிறார்களாம். மேலும் எழுத்துத் தேர்வில் இவர் 75 மதிப்பெண்களுக்கு 21 மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.
இந்தநிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வு எழுதிய மாணவி வைஷ்ணவி, தேர்வு எழுதவில்லை என வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டுள்ளது. இதனால் மாணவி வைஷ்ணவி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது.
ஆனால் பல மாதங்களாக பள்ளி பக்கமே வராமல், பொதுத்தேர்வு கூட எழுதாத தருண் என்ற மாணவர் செய்முறை தேர்வு எழுதியதாகவும், இவருக்கு 25 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனை அறிந்த மாணவி வைஷ்ணவி அதிர்ச்சியடைந்தார்.
நேற்று உடனடியாக மாணவி வைஷ்ணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசனிடம் முறையிட்டு நியாயம் கேட்டுள்ளனர். அதற்கு தலைமையாசிரியர் கூறுகையில், மாணவி வைஷ்ணவி செய்முறை தேர்வு எழுதியிருந்தார். அவர் தேர்வு எழுதிய பதிவுகள் பள்ளியில் இருக்கின்றன. கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும்போது தவறுதலாக மாணவி வைஷ்ணவி பெற்ற செய்முறை தேர்வின் மதிப்பெண்கள் மாணவன் தருண் பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று விளக்கம் அளித்தார்.
இது குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிமொழியின் கவனத்திற்கு தலைமை ஆசிரியர் கொண்டு சென்றார். இதனிடையே இது போன்ற தவறுதலான பதிவேற்றங்கள் வேலூர் மாவட்டத்தில் மேலும் 5 பள்ளிகளில் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது என்று முதன்மை கல்வி அதிகாரி மணிமொழி கூறினார். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications