வேலூர் நர்சு ஜீவிதாவுக்கு மார்ச் 2ல் இனிதே திருமணம்.. ஒரே மாதத்தில் கனவில் கூட நினைக்காத சம்பவம்
வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூரை அடுத்த மேலரசம்பட்டு மடிகம் கிராமத்தைச் சேர்ந்த ஜீவிதா என்பவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் ஜீவிதாவுக்கு கடந்த மார்ச் 2ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் ஆகி ஒரு மாதத்தில் ஜீவிதா எடுத்த முடிவு உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.
கணவன் மனைவி இடையே புரிதல் இன்மை மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.. திருமணம் முடிந்தபின்னர், பொதுவாக கணவன் இல்லத்தில் தனக்கு ஆதரவாக கணவன் இல்லாமல் போனால் அல்லது மாமியார் தனக்கு எதிராக நடந்து கொண்டால் அல்லது மாமியார், மருமகளை கட்டுப்படுத்த நினைப்பது, கணவன் மனைவியின் பேச்சை கேட்காமல் மாமியார் பேச்சை மட்டும் கேட்பது,மாமியார் என்ன சொல்கிறாரோ அதனை கேட்டு நடக்க வேண்டிய நிலை இருப்பது போன்ற ஏமாற்றங்களை இன்றைய 2 கே கிட்ஸ் பெண்கள் பலர் வெறுக்கிறார்கள்.

அதேபோல் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லும் தன்மை இல்லாதது.. தனக்கு பிடித்த வெற்றிகரமான வாழ்க்கை அமையவில்லை என்று விரக்தி அடைவது போன்ற காரணங்களால் தவறான முடிவெடுக்கிறார்கள். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் செவிலியர் திருமணம் ஆன ஒரு மாதத்தில் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூரை அடுத்த மேலரசம்பட்டு மடிகம் கிராமத்தைச் சேர்ந்த ஜீவிதா (வயது 24) என்பவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். அதே மேலரசம்பட்டு மடிகம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன். என்பவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
ஜீவிதாவுக்கும் சீனிவாசனுக்கும் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் சூழ இனிதே திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 1-ந் தேதி காலையில் ஜீவிதா தூக்குப்போட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயன்றுள்ளார். இதனை பார்த்த கணவர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஜீவிதா உயிரிழந்தார்.
இது லிஸ்டிலேயே இல்லையே.. புதுச்சேரி டூ திண்டிவனம்.. டவுர் போட்ட புஷ்பாக்களை சோதித்து ஆடிப்போன போலீஸ்
இது சம்பந்தமாக வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆன ஒரு மாதத்தில் உயிரிழந்திருப்பதால், இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியரும் விசாரணை நடத்த உள்ளார்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications