Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு நிமிடத்தில் 40 பவுன் தங்கம் லாபம்.. காட்பாடியில் இளம் பெண்ணுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: புதுக்கோட்டை டவுன் கம்பன் நகர் பகுதியை சேர்ந்த கலைராஜன் என்பவருடைய மனைவி அபர்ணா திருமயம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் 40 பவுன் நகையை திருடிய ஒடிசா பெண் காட்பாடி ரயில் நிலையத்தில் கணவருடன் சிக்கியுள்ளார். பல கேமராக்களில் தேடிய நிலையில், ரயிலில் ஏறி தப்பி சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை இறுதியாக தமிழக எல்லையில் உள்ள ரயில் நிலையமான காட்பாடியில் பிடித்துள்ளனர்.

இன்றைக்கு தங்கத்தின் விலை தாறுமாறாக விற்கிறது. சற்று அசந்தால் உங்கள் தங்க நகையை யாராவது திருடி சென்றுவிடுவார்கள். துரிதமாக செயல்படாவிட்டால், விழிப்புடன் இருக்காவிட்டால் உங்கள் தங்கம் உங்களுக்கு சொந்தம் இல்லை..

A profit of 40 sovereigns of gold in one minute An unimaginable incident for a woman in Katpadi

தங்க நகையை பொறுத்தவரை உங்களிடம் எத்தனை பவுன் தொலைந்து போனது என்பது சரியான ஆதாரங்கள் இருக்காது. நீங்கள் கொடுப்பது தான் புகார். அதேபோல் திருடியவர் சொல்வது தான் இறுதியானதாக இருக்கும். என்ன தான் நகை திருடியவரை பிடித்தாலும், முழு நகையை பறிமுதல் செய்வது சவாலானது. ஆனால் துரிதமாக செயல்பட்டால் தப்பிக்க முடியும். புதுக்கோட்டை போலீசுக்கு நடந்ததை பாருங்கள்.

புதுக்கோட்டை டவுன் கம்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் கலைராஜன் என்பவர் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அபர்ணா திருமயம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 29-ந் தேதி வழக்கம்போல் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டார்கள். வீட்டில் கலைராஜனின் தாயார் தமிழ்ச்செல்வி மட்டும் தனியாக இருந்துள்ளார். இவர் வீட்டின் பின்புறத்தில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது முன்பக்கமாக வடமாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த 40 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளார்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

இந்த சம்பவம் குறித்து, புதுக்கோட்டை டவுன் போலீசில் உடனே புகார் அளித்தார் அபர்ணா. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் பெண் ஒருவர் குழந்தையுடன் வீட்டுக்குள் நுழைந்து நகைகளை திருடிக்கொண்டு தப்பி செல்வது தெரியவந்தது.

ரயிலில் பயணம்

அதோடு, அந்த பெண் அடுத்தடுத்து சென்ற பகுதிகளின் கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், ஒருகட்டத்தில் ரயில் மூலமாக பயணம் செய்ததையும் கண்டறிந்தனர். தொடர்ந்து, தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தியதில், காட்பாடி ரயில் நிலையத்தில் அவர்கள் வந்தது தெரிந்தது.

காட்பாடி ரயில் நிலையம்

இதையடுத்து உடனடியாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் காட்பாடி ரயில் நிலைய வளாகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராவில் இடம்பெற்ற காட்சியின் அடிப்படையில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் குழந்தைகளுடன் நின்று கொண்டு இருந்த கணவன்-மனைவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

சிக்கிய ஒடிசா பெண்

அதில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதாகும் கீரன் என்ற பெண் என்பதும், அவருடைய கணவர் பிகாஸ் (40) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து புதுக்கோட்டையில் திருடிய 40 பவுன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒப்படைத்த போலீஸ்

தொடர்ந்து புதுக்கோட்டை போலீசாரிடம் திருட்டில் ஈடுபட்ட 2 பேரையும் மற்றும் நகைகளையும் காட்பாடி ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து அவர்களின் 2 குழந்தைகளையும் காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+