47 பேரை.. ஒரு மணி நேரத்தில் கடித்து குதறிய வெறிநாய்.. அலறியடித்து ஓடிய மக்கள்.. சோளிங்கர் அதிர்ச்சி
வெறிநாய் கடித்து 12 பேருக்கு தீவிர சிகிச்சை நடக்கிறது
ராணிப்பேட்டை: ஒரு வெறிநாய், ஒரு மணி நேரத்தில் 47 பேரை கடித்துள்ளது.. இதில் பலருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
வெறிநாய் கடித்து 12 பேருக்கு தீவிர சிகிச்சை நடக்கிறது
சோளிங்கர் பஸ் நிலையம் அருகே வெறிபிடித்த நாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது... அந்த நாய் திடீரென அந்த வழியாக போவோர், வருவோரையெல்லாம் துரத்தி துரத்தி கடிக்க ஆரம்பித்துள்ளது.

படுகாயம்
இதனால் பொதுமக்கள் கதறி நாலாபக்கமும் தெறித்து ஓடியுள்ளனர்.. மேலும் சிலர் அந்த நாயை விரட்டி அடித்தனர்.. இதனால், அந்த நாய் அந்த பகுதியில் இருந்து, பாட்டிகுளம் போர்டின் பேட்டை, தோப்பு கோவில் ஈஸ்வரன் கோவில் தெரு கேட்க பஜார் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குள் ஓடியது.. அங்கு தெருவில் சென்று கொண்டிருந்தோரையெல்லாம் கடித்து குதறியுள்ளது.. இதனால் பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்..

12 பேர்
அவர்கள் அனைவரும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.. மொத்தம் 12 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.. இவர்களுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் இருந்த வெறிநாய், பிறகு, மார்கெட் பகுதிக்கு சென்று அங்கும் சிலரை கடித்துள்ளது... சுமார் ஒரு மணி நேரத்திற்கெல்லம் 47 பேரை வெறிநாய் கடித்து குதறி உள்ளது..

கொரோனா
இதனால் ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பொதுமக்கள், அந்த வெறிநாயை அடித்தே கொன்றனர்.. நாய் கடித்து ஒவ்வொருவராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் சம்பவம், நாயை அடித்து கொன்ற சம்பவமும் ராணிப்பேட்டையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தகவலறிந்த ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி, அரசு மருத்துவமனையில், வெறிநாய் கடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.. வெறிநாய் கடித்த சம்பவம் குறித்தும் கேட்டறிந்தார்.. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

உத்தரவு
கடந்த 2 வருடங்களாகவே கொரோனா நோய்த்தொற்று காரணமாக தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யவில்லை என்கிறார்கள்.. அதனாலேயே நாய்கள் இப்படி பெருகி இருக்கலாம் என்றும், வெறிநாய்களையும், பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.. இதையடுத்து, சோளிங்கர் பகுதிகளில் தேவையில்லாமல் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications