வேலூரில் கட்டிட மேஸ்திரி வீட்டிற்கு கள்ளச்சாவி.. வசமாக சிக்கிய வாணியம்பாடி வாலிபர்.. ட்விஸ்ட்
வேலூர்: இன்றைய சூழலில் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் செல்வோர் கண்டிப்பாக வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் வைப்பது நல்லது. யாராவது அந்நியர் நுழைந்தால் அலர்ட் செய்யும் வகையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்தினால் தான் தப்பிக்க முடியும். ஏனெனில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைக்காமல், பீரோவை உடைக்காமல் நகையை திருடியிருக்கிறார் வேலூர் திருடன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மையில் ஒரு வீட்டில் திருட வந்த திருடர்கள், அங்கிருந்த கண்காணிப்பபு கேமராவால் கையும் களவுமாக ஒனரிடம் சிக்கிய, அம்பலப்பட்டு தெரித்து ஓடினார்கள். ஆனால் அவர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். மொபைல் மூலம் சிசிடிவி காட்சிகளை பார்த்து திருடனை ஓடவிட்டார் அதன் உரிமையாளர். ஆனால் சென்னையில் வெளிநாடு சென்ற தொழில் அதிபர் வீட்டில் புகுந்த திருடர்கள் பணத்தை கொள்ளை அடித்து சென்றுவிட்டனர். அங்கு சிசிடிவி வீட்டிற்குள் சிசிடிவி இருந்ததா என்று தெரியவில்லை.. இதேபோல் சில வீடுகளில் சிசிடிவி இல்லாததால் திருடர்களை பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இப்போது திருடர்கள் வீட்டின் பூட்டை உடைக்காமல், பூரோவை உடைக்காமல் கள்ளச்சாவி போட்டு நகை பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்.. அப்படி ஒரு சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. வேலூர் அருகே உள்ள அன்பூண்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான 28 வயதாகும் கோகுல லட்சுமணன் என்பவரது வீட்டில், கடந்த ஜனவரி 3-ந் தேதி ஒன்றரை பவுன் தங்க நகை, ரூ.71 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயிருந்தது. ஆனால் வீட்டின் கதவு, பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தார்கள். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பூசாமி வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று பார்த்து தீவிரமாக விசாரணை நடத்தினார்.
அதில் திருட்டில் ஈடுபட்டவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியை சேர்ந்த காட்வின் மோசஸ் (35) என்பதும், அவர் மீது திருப்பத்தூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜனவரி 7ம் தேதி அன்று வீட்டில் இருந்த காட்வின் மோசஸை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். அவர் கோகுலலட்சுமணன் வீட்டின் கதவு, பீரோவை கள்ளச்சாவி மூலம் திறந்து நகை, பணத்தை திருடியதை உறுதி செய்ததுடன், அவரிடமிருந்து ஒன்றரை பவுன் தங்க நகை மீட்கப்பட்டது. ஆனால் வெள்ளிப் பொருட்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணம் மற்றும் ரூ.71 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் செலவு செய்துவிட்டதாக கூறினார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications