வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லோரும் வாக்களிக்கிறாங்க.. ஆனால்.. இரும்பு கேட்டை பிடித்து குலுங்கி குலுங்கி அழுத ஏசி சண்முகம்

வாக்களிக்க வந்த ஏசி சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதார்

Google Oneindia Tamil News

Recommended Video

    வாக்களித்துவிட்டு குலுங்கி குலுங்கி அழுத ஏசி சண்முகம்-வீடியோ

    வேலூர்: வாக்களித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் பேசக்கூட முடியாமல் அங்கிருந்த இரும்புக் கம்பியை பிடித்து கொண்டு குலுங்கி குலுங்கி கண்ணீர் விட்டு அழுதது அனைவரையும் கலங்க செய்தது.

    திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வீட்டிலும் அவர்களது நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக 11 கோடிக்கு மேல் பணம் சிக்கியது. இந்த புகார் தொடர்பாக வேலூர் தொகுதியில் எம்பி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    இதை எதிர்த்து அதிமுக சார்பில் களமிறங்கிய வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் கோர்ட் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

    லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் பலி.. சேலம், ஈரோட்டில் அதிர்ச்சி! லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் பலி.. சேலம், ஈரோட்டில் அதிர்ச்சி!

    கொசப்பாளையம்

    கொசப்பாளையம்

    இந்நிலையில்தான், இடைத்தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய ஏசி சண்முகம் வந்திருந்தார். ஆரணி - கொசப்பாளையத்திலுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில்தான் இவருக்கு ஓட்டு உள்ளது.

    அழுதுவிட்டார்

    அழுதுவிட்டார்

    எனவே வாக்களிக்க பூத்துக்குள் நுழைந்தவரை புதிய நீதி கட்சி ஆரணி நகர செயலாளர் கணேசன் வரவேற்க சென்றார். ஆனால் ஏசி சண்முகத்தை பார்த்ததும் அடக்க முடியாமல் அழுதுவிட்டார். உடனே அங்கிருந்த ஏசி சண்முகமும் செய்தியாளர்களிடம் பேச முடியாமல் கண்கலங்கி நின்றார்.

    பேச முடியவில்லை

    பேச முடியவில்லை

    பிறகு தன்னையும் தேற்றிக் கொண்டு, கணேசனுக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு ஓட்டு போட சென்றார். பிறகு வெளியே வந்த ஏசி சண்முகத்தை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போதும் பேச முடியாமல் திரும்பிக்கொண்டு அங்கிருந்த இரும்புக் கம்பியை பிடித்து கொண்டு கதறி கதறி அழுதார். அவருடன் வந்தவர்கள் அவரை தேற்றினார்கள்.

    மீண்டும் கண்ணீர்

    மீண்டும் கண்ணீர்

    அதன்பிறகு பேச தொடங்கியவர், "தேர்தலை ரத்து செய்தது சரிதான் என்ற கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை. மே மாதம் நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலோடு சேர்த்து வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டும்" என்று சொல்லிவிட்டு மீண்டும் கண்ணீர் விட்டு அழுதார்.

    செலவு செய்தார்

    செலவு செய்தார்

    ஏற்கனவே வேலூரில் தேர்தல் ரத்து என்று சொன்னதும் இடிந்து போனது ஏசி சண்முகம்தான். ஏனென்றால் போன தேர்தலிலேயே எக்கச்சக்கமாக செலவு செய்து தோற்றார். அதனால் இந்த முறை அதிமுக கூட்டணியில் இடம்பெற பெரும் முயற்சியை மேற்கொண்டார். கடைசியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

    கவலை

    கவலை

    எப்படியும் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில் மீண்டும் தொகுதியில் இப்போது தாராளத்தை காட்டினார். ஆனால் தேர்தல் ரத்தானது எதிர்பாராத ஒன்று. அதனால் திரும்பவும் தேர்தல் அறிவித்தாலும் "இழந்தது" கிடைக்குமா? அல்லது அதிமுகவில் மீண்டும் சீட் கிடைக்குமா என்ற கவலையும், சோகமும் ஏசி சண்முகத்தை சூழ்ந்து கொண்டுள்ளது.

    English summary
    AC Shanmugam casts his vote and tears off Cancellation the Vellore Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X