தாமரையை சாப்பிட்டுட்டேன்! இரட்டை இலையை மென்னுட்டேன்.. இனி பலாபழம்தான்.. வேலூரில் மன்சூர் அலப்பறை

Subscribe to Oneindia Tamil

வேலூர்: தாமரையை சாப்பிட்டுவிட்டேன் என்றும் இரட்டை இலையை மென்றுவிட்டேன் என்றும் வேலூர் தொகுதி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் அலப்பறை செய்தார்.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வேலூர் எம்பி தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம், அதிமுக சார்பில் பசுபதி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

Actor Mansoor Ali khan campaigns at Vellore Lok sabha constituency

இந்த நிலையில் வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த மன்சூர் அலிகான் கடந்த 20ஆம் தேதி வேட்புமனு தாக்கலின் முதல் நாளன்றே வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார். இதைத் தொடர்ந்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தினமும் ஒரு அலப்பறையை செய்கிறார். அவர் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். வேலூரில் மார்க்கெட்டுக்கு போய் அங்குள்ள காய்கறிகள் வாங்கிக் கொள்வார்கள். இவர் அப்படி வாங்கும் போது இவர் வந்த வேலையை விட்டுவிட்டு மற்ற வேலைகளை பார்க்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது.

அது போல் வேலூரில் இப்போது 100 டிகிரிக்கு மேல் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதை சமாளிக்க மன்சூர் அலிகான் பிரச்சார வாகனத்தில் தென்னை ஓலை பந்தலை அனுப்பியுள்ளார். அந்த நிழலில் நின்ற படியே மன்சூர் அலிகான் பிரச்சாரம் செய்து வருகிறார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காடு, மலைகளை அழித்து வருகிறார்கள்.

நான் வென்றால் காடு, மலைகளை காப்பாற்றி நீர் நிலைகள் அமைப்பேன். மற்றவர்களை போல் 5 வருஷம் காணாமல் போக மாட்டேன். இங்கே தான் இருப்பேன், அதைத் தொடர்ந்து காடு, மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன் என ஆவேசமாக மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இன்றைய தினம் பூமார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு ஒரு பூக்கடையில் வெண் தாமரை மலரை கேட்டு வாங்கினார். பிறகு அந்த தாமரை இதழை சாப்பிட்டார். இரட்டை இலைகளை மென்றார். இதை செய்துவிட்டு தாமரையை சாப்பிட்டாச்சு, இலைகளை மென்னாச்சு, இப்போ இருப்பது பலாப்பழம் மட்டும்தான் என கூறி பலாப்பழத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னர் மன்சூர் அலிகான் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாமல் போய்விட்டது.

வேலூரில் சுயேச்சையாகவே மன்சூர் களம் இறங்குகிறார். வேலூரிலேயே தங்கியிருந்து ரம்ஜான் நோன்பையும் எடுக்கிறார். இவர் அண்மையில் நடிகை த்ரிஷாவை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவர் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். எனினும் இந்த வழக்கில் மன்சூருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து மேல்முறையீடு செய்து அந்த அபராத தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றார்.

அது போல் சரத்குமார் தனது கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறியிருப்பதாவது: கிளியை வளர்த்து வேறு கையில் கொடுத்துவிட்டீர்களே நாட்டமை என கடுமையாக விமர்சித்திருந்தார். அது போல் உரிமைத் தொகையை பிச்சை காசு என விமர்சித்த நடிகை குஷ்பு, ரூ 10 ஆயிரம் கொடுப்பது தானே , அதைவிட்டுவிட்டு இப்படி பேசுவது தவறானது என விமர்சித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+