வேலூர் அருகே 9 கிரகமும் உச்சம் பெற்றவர்.. ராணிப்பேட்டை எஸ்பியால் 31 வருடம் கழித்து சிக்கியது எப்படி?
வேலூர்: 1994ம் ஆண்டு பழைய வேலூர் ஜில்லாவில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் ஒன்றாகவே இருந்தன. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் தற்போது வரை ஒன்றாகவே இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பிரிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் பணியாற்றிய பாஸ்கர்ஜோதி கோகோய் 31 வருடம் கழித்து ஏஐ தொழில் நுட்பத்தால் சிக்கியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் வேலை செய்து வந்தவர் சவுத்ரி. இவருடன் அசாம் மாநிலத்தை சேர்ந்த பாஸ்கர்ஜோதி கோகோய் என்பவர் வேலைசெய்து வந்தார். சவுத்ரியின் மனைவி ஜெயஸ்ரீ கடந்த 1994-ம் ஆண்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில், ஜெயஸ்ரீயை கொலை செய்ததாக அவரது கணவர் சவுத்ரிக்கு 2005-ம் ஆண்டு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் 2-வது குற்றவாளியான சவுத்ரியுடன் வேலை செய்து வந்த பாஸ்கர் ஜோதி கோகோய் தலை மறைவானார். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா பழைய வழக்கு கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது பாஸ்கர்ஜோதி கோகோய் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து பாஸ்கர் ஜோதி கோகோயை பிடிக்க அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர் சித்திக், அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பாஸ்கர் ஜோதி கோகோயின் சொந்த மாநிலமான அசாம் மாநிலத்திற்கு சென்றனர். திப்ருகர் நகர் அடுத்த சபூவா கிராமத்தில் கோகோய் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பெயர், புகைப்படத்தை வைத்து, அவரை போலீசார் உறுதி செய்தனர். கோகோய் தப்பிசென்ற போது அவருக்கு 21 வயது. ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் அவருடைய இப்போதைய படத்தை போலீசார் வரைந்தனர். பின்னர் 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோகோய்யை சபூவா கிராமத்தில் மடக்கிப்பிடித்து, போலீசார் கைது செய்து, அழைத்து வந்தனர். கொலை வழக்கில் 31 வருடம் தப்பித்து வாழ்ந்து வந்தவர், இப்போது ராணிப்பேட்டை எஸ்பி எடுத்த அதிரடி நடவடிக்கையால் சிக்கியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications