இப்போது நினைத்தாலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியும்.. மு. க. ஸ்டாலின் அதிரடி பேச்சு
வேலூர்: அதிமுக ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் என்ன ஆகும் என்பது தெரியும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திறந்த வேனில் வாக்கு சேகரித்த அவர், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசு தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டு செய்த சதிகளை முறியடித்து வென்றதைப் போல வேலூரிலும் வெல்வோம். திமுக மீது களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதாக கூறுகிறீர்கள்; நீங்கள் (முதல்வர் பழனிசாமி) அல்வா கொடுத்து ஏமாற்றியதாக நான் கூறுகிறேன் என்றும் தெரிவித்தார். சூழ்ச்சியை, சதியை மக்கள் முறியடித்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
மும்மொழிக் கொள்கைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, அதை வாபஸ் பெறவைத்தது திமுக தான் என்றும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க குடியாத்தம் கே.வி.குப்பம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை வேலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இப்போது நினைத்தாலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியும்; அந்த எண்ணம் உள்ளது. காத்துக்கொண்டிருக்கிறோம் எனவும் கூறினார்.
-
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications