Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் துரைமுருகன் வீட்டுக்குள் கடப்பாரையை எடுத்து சென்ற அமலாக்கத்துறை.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் சூழலில் இன்று இரவு முதியவர் ஒருவர் கடப்பாரையை எடுத்து கொண்டு உள்ளே சென்றார். அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதன் அடிப்படையில் அவர் கடப்பாரையை எடுத்து சென்றதாக கூறப்படும் நிலையில் ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருப்பவர் துரை முருகன். திமுகவில் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறது. இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் திமுக எம்பியாக உள்ளார்.

ed raid durai murugan vellore

இந்நிலையில் தான் இன்று துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் காட்பாடி, காந்தி நகரில் தமிழக திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளது. அங்கு தான் இந்த சோதனை என்பது நடந்து வருகிறது. சென்னையில் இருந்து இன்று வேலூர் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கு வீட்டு உரிமையாளர்கள், உறவினர்கள் யாரும் இல்லை என்பதால் 5 மணிநேரம் கழித்து தான் இந்த சோதனை தொடங்கியது. இரவு நேரம் ஆனபோதிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று இரவு திடீரென்று முதியவர் ஒருவர் கடப்பாரையை கையில் எடுத்து கொண்டு துரைமுருகன் வீட்டுக்குள் நுழைந்தார். அந்த முதியவர் துரைமுருகன் வீட்டில் வேலை பார்த்து வரும் நபர் ஆவார்.

இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவை தொடர்ந்து தான் அந்த முதியவர் கையில் கடப்பாரையை எடுத்து உள்ளே சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏதேனும் ஒன்றை கடப்பாரையால் உடைத்து சோதனை மேற்கொள்கின்றனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக திமுக நிர்வாகியும், அமைச்சர் துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அவருக்கு சொந்தமான தொழிற்சாலைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி இருந்தனர்.

இந்த சோதனைக்கு கடந்த 2019 ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நடந்த சம்பவம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோவினல் ரூ.11 கோடி பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் இன்ற அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துவதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+