மாரியாத்தா கண் திறந்துச்சாமே.. கருவிழியெல்லாம் தெரிந்ததாக பக்தர்கள் வியப்பு.. வேலூரில் பரபரப்பு
வேலூர் அருகே அம்மன் சிலை கண் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

வேலூர்: மாரியாத்தா திடீர்னு கண் திறந்துச்சாமே... என்ற தகவல்தான் வேலூர் மாவட்டம் முழுவதும் பரவி வருகிறது.
காட்பாடி அருகே செங்குட்டை பஜனை கோயில் தெருவில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையானது.
சக்தி வாய்ந்த அம்மன் இந்த ஆலயத்தில் குடியிருப்பதாக அந்த பகுதி மக்களால் நீண்ட காலமாகவே அதிகமாக நம்பப்பட்டு வருகிறது.

பூஜை வழிபாடு
இப்போது மார்கழி மாதம் என்பதால் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. அப்படித்தான் கோயிலில் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். மாரியம்மன் கோவில் என்பதால் பெண்களும் நிறைய பேர் இந்த பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

கண் திறந்தது
அப்போது திடீரென அம்மன் கண் திறந்ததாக தகவல் பரவ தொடங்கியது. இதனால் ஊரே பரபரப்பாகி விட்டது. "அம்மன் சாமி கண் திறந்துடுச்சாமே" என்று கேட்டுக் கொண்டே மக்கள் கூட்டம் கூட்டமாக மாரியம்மன் கோயிலுக்கு வர ஆரம்பித்துவிட்டனர்.

பிரகாசமான கண்கள்
சிறிது நேரத்தில் கோயில் கூட்டத்தால் வழிந்து நிறைந்தது. மனிதர்களை போலவே கருவிழி, விழி வெண்படலம் போன்று அம்மன் கண் இருந்ததாகவும், மக்களை நேருக்கு நேர் கண்களை திறந்து பிரகாசமாக அம்மன் பார்ப்பது போல இருந்ததாகவும் பக்தர்கள் பரவசப்பட்டு ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டார்கள்.

சாமி ஆடினர்
இதனால் பக்தர்கள் அம்மனை பார்த்து தேங்காய்களை எடுத்து உடைக்க ஆரம்பித்து விட்டார்கள். சூடம் ஏற்றி வழிபாடு ஒரு பக்கம் நடத்த துவங்கினர். இதுஎல்லாவற்றிற்கும் மேலாக சில பெண்கள் திடீர் "சாமி" வந்து தங்களையும் மறந்து பக்தி பரவசத்துடன் ஆட ஆரம்பித்துவிட்டனர்.

பெரும் பரபரப்பு
திடீரென அம்மன் கண் திறந்ததாக வந்த தகவலால் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் திரளவே பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications