இபிஎப் சம்பளம் கட்டாயமா? வருங்கால வைப்பு நிதி ரூல்ஸ் மாறுகிறதா? பென்ஷன் எவ்வளவு உயரும்? சூப்பர்
வேலூர்: தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு முக்கியமான இபிஎப் திட்டத்தில் பெரிய மாற்றம் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இபிஎப் ஊதிய உச்சவரம்பை உயர்த்துவது குறித்து வருங்கால வைப்பு நிதி நிறுவனம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதுகுறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தற்போது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) திட்டத்தில் கட்டாயமாக சேர வேண்டிய ஊழியர்களுக்கான மாத ஊதிய உச்சவரம்பு ரூ.15 ஆயிரமாக உள்ளது. இந்த உச்சவரம்பு கடந்த 2014ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு 10 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை...

வருங்கால வைப்பு நிதி ரூல்ஸ் - சம்பளம்
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சம்பளமும், வாழ்க்கை செலவும் பலமடங்கு உயர்ந்துள்ளதால், இந்த உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களிடையே வலுத்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, ரூ.15 ஆயிரமாக உள்ள இபிஎப் ஊதிய உச்சவரம்பை ரூ.25 ஆயிரமாக உயர்த்துவது குறித்து வருங்கால வைப்பு நிதி நிறுவனம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது இபிஎப் திட்டத்தில், ஊழியரின் சம்பளத்தில் இருந்து ஒரு தொகையும், நிறுவனத்தின் சார்பில் ஒரு தொகையும் மாதந்தோறும் செலுத்தப்படுகிறது. நிறுவனத்தின் பங்களிப்பான 12 சதவீதத்தில், 8.33 சதவீதம் ஊழியர் ஓய்வூதிய திட்டத்திற்கும், மீதமுள்ள 3.67 சதவீதம் ஊழியரின் இபிஎப் சேமிப்பு கணக்கிற்கும் செல்கிறது. ஊதிய உச்சவரம்பு உயர்ந்தால், இந்த பங்களிப்பு தொகையும் அதிகரிக்கும்....
ஓய்வூதிய பணிகள்
அதனால், ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியமும், இபிஎப் சேமிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்.
சமீப காலமாக இபிஎப் நிறுவனம் பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஓய்வு பெறும் ஊழியர்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து தங்களுக்கான இபிஎப் தொகையை பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல், ஓய்வூதிய தொடர்பான பணிகளையும் எளிதாக மேற்கொள்ள முடிகிறது.
அதுமட்டுமல்லாமல், குறைகளை ஆன்லைன் வழியாக பதிவு செய்து தீர்வு பெறும் வசதியும் உள்ளது. அவ்வளவு ஏன்? சமீபத்தில் ஏடிஎம் வசதி மற்றும் எல்ஐசி காப்பீட்டு தொகையை இபிஎப் கணக்கிலிருந்தே செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இபிஎப் ஊதிய உச்சவரம்பு
இப்படிப்பட்ட சூழலில் இபிஎப் ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்பட்டால், தனியார் துறையில் பணிபுரியும் நடுத்தர வருமான பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு மிகப் பெரிய அளவில் நன்மை கிடைக்கும். ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் நிதி பாதுகாப்பும் அதிகரிக்கும்.
மேலும், ஊதிய உச்சவரம்பு உயர்வதால் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்பதையும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மொத்தத்தில், தொழிலாளர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் அவசியம் என்கிறார்கள்...!!!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications