அம்மா, மகள்.. ஆளுக்கு ஒரு கள்ளக்காதலன்.. நடு ரோட்டில் இருவரும் சரமாரி மோதல்.. ஒரு உசுரு போச்சு!
கள்ள உறவு காரணமாக ஆட்டோ டிரைவர் வெட்டி கொல்லப்பட்டார்
வேலூர்: அம்மாவுக்கு ஒரு கள்ளக்காதலன்.. மகளுக்கு ஒரு கள்ளக்காதலன்.. கடைசியில் 2 கள்ளக்காதலர்களும் நடுரோட்டிலேயே அடித்து உதைத்து கொண்டனர்.. இறுதியில் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்.
வேலூரை சேர்ந்தவர் பரத்... 36 வயதாகிறது.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர்... வேலூர் சாரதி மாளிகை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவரும்கூட... கல்யாணமாகி செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இதே வேலூரை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு மக்கான் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருடன் கள்ள உறவு உள்ளதாக கூறப்படுகிறது.

தகராறு
அதேபோல, இந்த பெண்ணின் மகளுடன் பரத்துக்கும் கள்ள உறவு இருந்திருக்கிறது. அதாவது அந்த அம்மாவுடன் மைக்கேல் என்பவருக்கும், அவரது மகளுடன் பரத்துக்கும் உறவு நீடித்து வந்ததாக தெரிகிறது இதுதொடர்பாக பரத் - மைக்கேல் 2 பேருக்குள்ளும் தகராறு வந்திருக்கிறது.

கிரகபிரவேசம்
இந்த சமயத்தில் பரத் புதிதாக ஒரு வீடு கட்டினார்.. அதற்காக நேற்று முன்தினம் கிரகபிரவேசம் செய்தார்.. கிரகபிரவேசம் முடிந்த கொஞ்ச நேரத்தில் அந்த புது வீட்டிலிருந்து கிளம்பி பெரியார் நகர் சென்றார். அந்த சமயத்தில் மைக்கேல் வந்திருக்கிறார்.. நடுரோட்டிலேயே திரும்பவும் சண்டை போட்டுள்ளனர்.

ஆத்திரம்
பிறகு தகராறு முடிந்து பரத் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றார்.. ஆனால் மைக்கேல் பின்னாடியே ஒரு இரும்பு கம்பியை எடுத்து கொண்டு போய், பரத்தின் தலையில் ஓங்கி அடித்துவிட்டார்.. இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பரத் கீழே விழுந்தார். ஆனால் கீழே விழுந்தும், ஆத்திரம் அடங்காமல் மைக்கேல் இரும்பு கம்பியால் பரத்தை அடித்து கொண்டே இருந்தார்.

அதிர்ச்சி
சிறிது நேரத்தில் பரத் உயிர் பிரிந்தது.. தகவலறிந்து வேலூர் வடக்கு போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு, மைக்கேலையும் கைது செய்தனர். கிரகப்பிரவேசம் முடிந்து கொஞ்ச நேரத்திலேயே ஆட்டோ டிரைவர் அடித்து கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications