கெமிக்கல் இஞ்சினியர் டூ அதிமுக வேட்பாளர்... துரைமுருகனுக்கு டஃப் தந்த ராமுவின் பின்னணி இது தான்..!
வேலூர்: காட்பாடி தொகுதியில் துரைமுருகனுக்கு கடும் நெருக்கடி கொடுத்ததன் மூலம் தமிழக அரசியல் களத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ராமு.
யார் இந்த ராமு, அவருக்கு எப்படி இவ்வளவு செல்வாக்கு என்பதை அறிந்துகொள்வதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
துரைமுருகனுக்கு எதிராக அதிமுக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளது எனக் கூறப்பட்ட நிலையில், தான் டம்மியல்ல என்பதை தேர்தல் முடிவின் மூலம் நிரூபித்துள்ளார் ராமு.

பொறியியல் படிப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொண்டசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமு. பி.இ. கெமிக்கல் இஞ்சினியரிங் முடித்துள்ள இவர், மூன்று முறை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார். பொதுமக்களுடன் நெருங்கிப் பழகுவதில் கெட்டிக்காரர். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உதவி நிமித்தமாக ராமுவை சந்தித்தால் அவர்களுக்கு உதவி கேரண்டி.

மனம் தளராமல்
இதனாலேயே இவருக்கு கட்சியை கடந்தும் ஆதரவு பெருகியது. ஒரு கட்டத்தில் இவர் குறித்த தகவல் ஜெயலலிதா வரை சென்றதால், ராமுவுக்கு மாவட்டச் செயலாளர் பதவியும் 2015-ல் தேடி வந்தது. ஓராண்டு காலம் மாவட்டச் செயலாளராக இருந்த அவர் மீண்டும் ஒன்றியச் செயலாளராக டி புரோமோஷன் செய்யப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல் பணியாற்றி அரசியலில் தனக்கான ஆதரவாளர்கள் வட்டத்தை விரிவாக்கிக் கொண்டார்.

தன்மானப் பிரச்சனை
வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக உள்ள அவருக்கு துரைமுருகனை எதிர்த்து போட்டியிட இந்தமுறை வாய்ப்புக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது ராமு டம்மி வேட்பாளர் என்றும், துரைமுருகன் வெற்றிக்காக அதிமுக தலைமையின் அட்ஜெஸ்ட்மெண்ட் எனவும் தகவல்கள் உலா வரத் தொடங்கின. இதனை தன்மானப் பிரச்சனையாக எடுத்துக் கொண்ட ராமு, தான் டம்மியல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் பணியாற்றி இறுதி வரை துரைமுருகனுக்கு கடும் போட்டியை கொடுத்தார்.

அரைநூற்றாண்டு
வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகனிடம் ராமு வெற்றியை பறிகொடுத்திருந்தாலும் அது வெற்றிகரமான தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. அரைநூற்றாண்டு கால சட்டமன்ற அனுபவம் உடைய அரசியல் ஜாம்பவனான துரைமுருகனையே, வாக்கு எண்ணிக்கை நாளன்று பலமுறை தண்ணீர் குடிக்க வைத்துவிட்டார் ராமு.

சுணக்கமின்றி
ராமு இந்தளவுக்கு துரைமுருகனுக்கு நெருக்கடி கொடுத்ததற்கு காரணம் அவரது பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபட்டதும் ஒன்று. மிகப்பெரிய பொறுப்புகளில் இருந்தும், காட்பாடிக்கு துரைமுருகன் என்ன செய்தார், அல்லது உங்களுக்கு தான் அவர் என்ன உதவி செய்தார் என செல்லும் இடங்களிலெல்லாம் கேள்வி எழுப்பி வாக்காளர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிக்கொண்டார் ராமு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications