எடப்பாடி ஆட்சி... பாஜகவின் பினாமி ஆட்சி... கிராம சபை கூட்டத்தில் மக்களிடம் பொங்கிய ஸ்டாலின்
அரூர்: தமிழகத்தில் அதிமுக அரசு தூங்கி கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஸ்டாலின், அங்கிருந்து கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தருமபுரி மாவட்டம் அரூர் அருகே செட்ரபட்டி ஊராட்சிக்கு சென்றார்.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:தமிழகத்தில் மொத்தம் 12, 612 ஊராட்சிகள் உள்ளன.எங்கு சென்றாலும் மக்களை நேரிடையாக சந்திப்பவர் கருணாநிதி.

தமிழகத்தில் பினாமி ஆட்சி
ஆட்சியில் திமுக இல்லாவிட்டாலும்... இருப்பது போன்று தான் மக்கள் நினைத்து கொண்டிருக்கின்றனர். மோடியின் பினாமி ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மக்கள் நலனில் அதிமுக அரசு கவனம் செலுத்தவில்லை.

கோமா நிலையில் அரசு
பெரும்பான்மை இல்லாத ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஐசியூ வார்டில், கோமா நிலையில் இந்த ஆட்சிக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. மோடியின் பினாமி ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

மக்களுக்கு நம்பிக்கை
மைனாரிட்டி அரசு தான் இப்போது உள்ளது.ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. திமுக மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.

திட்டங்கள் நடைபெறவில்லை
மேலும் 18 தொகுதிகளில் ஓராண்டாக பிரதிநிதிகள் இல்லை. தமிழகத்தில் திமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நீங்கள் உள்ளீர்கள்.அதன் காரணமாக... 18 தொகுதிகளில் மக்கள் நலத்திட்டங்கள் நடைபெற வில்லை.

தூங்கும் அரசு
மொத்தத்தில் தமிழகத்தில் அதிமுக அரசு தூங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெறும் என்பதால், அதை தள்ளிப்போட்டு வருகிறது. நான் கிராமங்களுக்கு செல்வது புதியது இல்லை. தருமபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த அரசால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications