அண்ணாமலையால் புதிய நம்பிக்கை பிறந்தது.. 25 அல்ல அதுக்கும் மேல்.. அழுத்தமாக சொன்ன அமித் ஷா
வேலூர்: இன்று காலை கட்சியின் அமைப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநில தலைவர் அண்ணாமலை எப்படி அதை நடத்தி கொண்டு இருந்தார் என பார்த்த போது எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
வேலூரில் நடைபெற்ற மத்திய பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மத்தியில் ஊழலற்ற சிறப்பான ஆட்சி கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் 25 தொகுதிகளை வென்று கொடுக்க வேண்டும்.

3- வது முறையாக மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைய உள்ளது. தமிழின் தொன்மையான செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்தது பிரதமர் மோடிதான். இன்று காலை கட்சியின் அமைப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநில தலைவர் அண்ணாமலை எப்படி அதை நடத்தி கொண்டு இருந்தார் என பார்த்த போது எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது.
அதாவது, 25 தொகுதி இல்லை.. அதற்கும் மேலே பாராளுமன்ற தொகுதிகளை வென்று தமிழகத்தின் அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க போகிறார்கள். தமிழ் மொழியையும் தமிழின் தொன்மையும் மேம்படுத்தும் வகையில் பல சிறப்புகளை மோடி சேர்த்து இருக்கிறார்.
நீட், சிஆர்.பிஎப், உள்ளிட்ட தேர்வுகளை தமிழில் எழுத வழிவகுத்தவர் பிரதமர் மோடி. 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2024 ல் மீண்டும் ஒருமுறை பாஜக 300 க்கும் அதிகமான தொகுதிகளை பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
-
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications