ஆரணி மஞ்சுளா.. நாகை செல்வி.. விஏஓ முதல் தாசில்தார் வரை நம்பவே முடியலயே.. இப்ப வேலூரிலும் நிலமோசடி
வேலூர்: நில மோசடி காரணமாக ஒவ்வொரு அதிகாரியாக கைதாகி கொண்டிருப்பது தமிழகத்தில் அதிர்ச்சியை தந்து வருகிறது. இப்போதும் ஒருவர் சிக்கியிருக்கிறார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் போலி பத்திரங்களை ஒரிஜினல் போலவே தயார் செய்து, நில மோசடிகள் பெருகி வருகின்றன.. இவைகளை வேருடன் ஒழிக்கும் முயற்சியில் தமிழக பதிவுத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

போலி பத்திரங்கள்: இதற்காகவே, போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு நிறைய முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது. ஆனாலும் நிலமோசடிகளில் அதிகாரிகளே சிக்கிவிடுகிறார்கள்.. இதற்காக லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே வருகிறது.. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதாகியும் வருகிறார்கள்.
சமீபகாலமாக பெண் அதிகாரிகளும் இதில் கைதாவது அதிர்ச்சியை தந்துவருகிறது. 10 நாட்களுக்கு முன்பு, பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கி விஏஓ செல்வி என்பவர் கைதானார்.. செல்வியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரை அழைத்துச் சென்றதை, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்களாம். அதுபோலவே 4 நாட்களுக்கு முன்பு ஆரணியில் சார்பதிவாளர் ஒருவர் சிக்கினார்..
8 ஏக்கர் நிலம்: இதோ 8 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த விவகாரம் உட்பட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக காட்பாடி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் ஒருவர் சிக்கியிருக்கிறார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு காலக்கட்டங்களில் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவுகள் நடந்துள்ளதாக கடந்த ஆண்டு நடந்த தணிக்கையின்போது தெரிய வந்தது.
சார் பதிவாளர்: குறிப்பாக, காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசுக்கு சொந்தமான 8 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும், 73 சென்ட் புறம்போக்கு நிலத்தையும் பலருக்கும் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதும், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளையும் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதும் தணிக்கையின்போது தெரிய வந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய பத்திரப்பதிவு டிஐஜி சுதாமல்லி, இந்த முறைகேட்டில் காட்பாடி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவக்குமார் மொத்த காரணகர்த்தாவாக இருப்பதை கண்டுபிடித்தார்.. இந்த சிவக்குமார் பல முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கைக்கு ஆளானவர் என்பதும் தெரிய வந்தது.
அதிரடி நடவடிக்கை: அதுமட்டுமல்ல, காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் வெறும் 10 நாட்கள் மட்டுமே இவர் பொறுப்பு சார்பதிவாளராக பதவி வகித்தாராம். அப்போதும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்தது.
எனவே, இதுகுறித்த விசாரணை அறிக்கையை பத்திரப்பதிவு ஐஜி ஆலிவர் பொன்ராஜூக்கு டிஐஜி சுதாமல்லி அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் காட்பாடி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவக்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் பதிவுத்துறை ஐஜி.. ஆனால், இவர்மீது ஏகப்பட்ட முறைகேடுகள் உள்ளதால், டிஸ்மிஸ் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications