வேலூரில் இருந்து டெல்லி பறந்த மேட்டர்.. மறுவாழ்வு தந்த மோடி.. சொன்னது யார் யாருங்க.. அப்ப கன்பார்ம்டு
சென்னை: பாஜக எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ, அங்கெல்லாம் வலுவான வேட்பாளர்களை நிறுத்த அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளாராம். அதற்கான வியூகங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த முறை வேலூர் தொகுதியில் போட்டியிட்டு, அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திடம் சொற்ப வாக்குகளில், வெற்றியை பறிகொடுத்தவர் ஏ.சி.சண்முகம்..

இஸ்லாமியர் சமுதாயத்தினரிடம் இவரது பிரச்சாரம் பெரும் கவனத்தை பெற்றிருந்தது.. இப்போதும், வேலூர் தொகுதியின் இஸ்லாமியர்களின் வாக்குகளை தன்பக்கம் திருப்புவேன் என்று உறுதியுடன் சொல்லி வருகிறார்.. அத்துடன் எம்பி தேர்தலுக்கான வேலையையும் இப்போதே ஆரம்பித்துவிட்டார் ஏசி சண்முகம்..
ஏசி சண்முகம்: எப்படியும் தன்னுடைய தொகுதியில் "தாராளங்களை" வாரி இறைப்பார் என்பதால், இவரை கூட்டணியில் சேர்க்க அதிமுக, பாஜக என யாராக இருந்தாலும் தயங்குவதில்லை. கடந்த முறை திமுகவிடம் இழந்ததை, இந்த முறை பெற்றுவிடுவது என்ற முனைப்பில் உள்ளார் ஏசி சண்முகம்.
அதுமட்டுமல்ல, கல்வி தந்தைகளாக அறியப்படும் ஜெகத்ரட்சகன், பாரிவேந்தர் எல்லாம் எம்.பியாகி டெல்லி பக்கம் என்றோ சென்றுவிட்ட நிலையில், ஏசி சண்முகம் அதற்குதான் தீவிரமாக முயன்று கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
அதிமுகவுக்கு தன்னுடைய ஆதரவை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் ஏசி சண்முகம், பாஜகவை ஒருபோதும் எதிர்த்ததில்லை.. அதேசமயம் பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி என ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதால், எப்போதுமே மத்திய அரசுடன் சுமூக உறவை பேணி வருகிறார்.
கல்வி நிறுவனம்: ஏசி சண்முகம் என்றாலே, எம்ஜிஆரின் விசுவாசி என்றே அடையாளம் காணப்பட்ட நிலையில், பலமுறை அதிமுகவுடன் கூட்டணி வைத்து, இரட்டை இலை சின்னத்தில் தொகுதி மக்களிடம் வாக்கு கேட்வர். எனினும், இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு வெளிப்படையான ஆதரவை தராமல் உள்ளார். அதேசமயம், பாஜகவையும் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார். இதோ இப்போதுகூட, பிரதமருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்டசூழலில், உத்தரகாண்ட் தொழிலாளர்கள் மீட்கப்பட்டதற்கு, பிரதமருக்கு நன்றி சொல்லி உள்ளார் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்.. இது தொடர்பாக அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
"உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கத்தில் தீபாவளியன்று ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் துயர்த்திற்குள்ளான நிலையில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி அறிவுரையின்படி பிரதமர் மோடி உதவியுடன் மழை, குளிர் சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் செயல்பட்ட பேரிடர் குழுவின் உதவியுடன் 17 நாட்கள் போராடி தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.
நன்றி: 17 நாட்கள் போராடிய 41 தொழிலாளர்களின் உயிரை பத்திரமாக மீட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியும், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வும் கொடுத்த உத்தர உத்தர காண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, பிரதமர் மோடி ஆகிேயாருக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications