8ம் வகுப்பு வரை செலவே இல்லாமல் சிபிஎஸ்இ கல்வி.. தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்ப்பது எப்படி?
வேலூர்: தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கு தயாராக இருங்கள்.. அதற்கு என்னென்ன வேண்டும்,என்ன தகுதி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மற்றும் தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 20-ந்தேதி வரை www.rte.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதுபற்றி முழு விவரஙகளை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 2024-2025-ம் கல்வியாண்டில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (எல்.கே.ஜி.) சேர்க்க வருகிற 22-ந் தேதி முதல் அடுத்த மாதம் (மே) 20-ந் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2020 முதல் 31.7.2021-க்குள் பிறந்திருக்க வேண்டும். பிறப்பு சான்று, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு சாதிச்சான்றிதழ், நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் உள்ள வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
முதன்மை கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்), வட்டாரக்கல்வி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய அலுவலகங்களிலும் கட்டணமின்றி விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளியில் 28.5.2024 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள். குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் படி சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் மே மாதம் 29-ந் தேதி இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்.
சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை மே 29-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும். கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகத்தை (தனியார் பள்ளிகள்) தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
சர்ச்சைக்கு நடுவே சிபிஎஸ்இ–க்கு புதிய தலைவர் – செயலாளர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications