'சூர்யாவின் ஜெய் பீம் படத்தை.. நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்..' மத்திய அமைச்சர் பரபர பேச்சு
வேலூர்: வேலூரில் நடைபெற்ற சமநீதி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஜெய்பீம் படத்திற்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டார்.
Recommended Video
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருந்த படம் ஜெய் பீம். இத்திரைப்படம் தீபாவளி சமயத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.
ஜெய் பீம் வெளியான போதே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தை வெகுவாக பாராட்டினர்.

ஜெய் பீம்
மேலும் IMDB தளத்திலும் இப்படம் பல ஹாலிவுட் திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளியிருந்தது. இந்தச் சூழலில் படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் குற்றம் செய்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் உள்ள காலெண்டரில் வன்னியர் சாதியைக் குறிப்பிடும் வகையிலான சின்னம் இருந்ததாகச் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து அந்த காலெண்டரில் இருந்த படம் மாற்றப்பட்டது. இருப்பினும், சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சூர்யா மற்றும் அமேசான் நிறுவனத்துக்கு வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

வருத்தம் தெரிவித்த இயக்குநர்
நாளுக்கு நாள் இந்தச் சர்ச்சை பூதாகரமாகி வரும் சூழலில் ஜெய் பீம் சர்ச்சை தொடர்பாக இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். தனக்கு எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையும் அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்றும் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு இயக்குநராக முழு பொறுப்பும் தன்னுடையது என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமநீதி மாநாடு
இந்தச் சூழலில் வேலூரில் நடைபெற்ற சமநீதி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஜெய்பீம் படத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், வேலூர் மாங்காய் மண்டி அருகில் இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவின் சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் சூசை தலைமையில் சமநீதி மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தலின் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்துகொண்டு அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்து மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

ஜெய் பீம்
இந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, "தமிழில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் நல்ல திரைப்படம். அந்த குழுவினருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். இதனை பிற மொழிகளில் மொழிபெயர்த்தாலும் அதனை வரவேற்கிறோம். திரைப்படத்தின் நடிகர், இயக்குநர் ஆகியோர்களுக்கு இந்தியக் குடியரசு கட்சி பாதுகாப்பாக இருக்கும்" என்று பேசினார்,
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications