தஞ்சை, வேலூர், சென்னை.. தமிழ்நாட்டிற்கு வரும் புதிய விமான நிலையங்கள்.. மொத்தமாக எல்லாமே மாறுதே

Subscribe to Oneindia Tamil

வேலூர்: அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் பின்வரும் விமான நிலையங்கள் கட்டப்பட உள்ளன. விமான நிலையங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் முக்கியமான சர்வதேச விமான நிலையம் ஆகும். இங்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வப்போது இங்கே கண்ணாடி உடைந்து விழும் சம்பவம் நடக்கும். ஆனாலும் சென்னை விமான நிலையம் பாதுகாப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும்.

Chennai, Thanjavur and Vellore tp get more airport: It will transform Tamil Nadu completely

2017-18ம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தை 20.26 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான் என்று உலகம் முழுக்க பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானம் செல்கிறது.

புதிய விமான நிலையம்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் இன்னும் 10 வருடங்களில் தற்போது சென்னை விமான நிலையம் இருக்கும் பகுதி அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும். இதனால் மக்கள் அதிக அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அதிக அளவில் விமானங்கள் வந்து செல்கிறது. இதனால் விமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு கொஞ்சம் வெளியே விமான நிலையம் அமைக்க நிலம் தேடி வந்தனர். அதன்படி காஞ்சிபுரம் - அரக்கோணம் அருகே இருக்கும் பரந்தூர், மாண்டூர் ஆகிய இடங்கள் ஆலோசிக்கப்பட்டது. கடைசியில் தற்போது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து இந்த பரந்தூர் 70 கிமீ தொலையில் இருக்கிறது. மொத்தம் இந்த விமான நிலையம் 3800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழக அரசு சார்பாக இந்த நிலம் வழங்கப்படுகிறது.

வேலூர் விமான நிலையம்: 97 ஏக்கர் பரப்பளவில், சிறிய விமானங்களுக்கு 850 மீட்டர் ஓடுபாதையுடன் கூடிய வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இது அருகிலுள்ள பகுதிகளுக்கு விரிவான வளர்ச்சியைக் கொண்டுவரும். ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், ராணிப்பேட்டை, சித்தூர் மற்றும் பல பகுதிகள் இந்த விமானம் நிலையம் காரணமாக மாற்றம் அடையும். விமான நிலைய செயல்பாடுதொடங்கிய பின் முக்கிய பெருநகர மையமாக இந்த பகுதி உருவெடுக்கும்.

இந்த திட்டமிடப்பட்ட விமான நிலையம் உள்ளூர் அளவில் விமான போக்குவரத்தை அதிகரிக்கும். அடுக்கு-II மற்றும் III நகரங்களுக்கு கணிசமான முன்னேற்றத்தைக் கொடுக்கும் வகையில் இந்த விமான நிலையம் செயல்படும்.

நெடுஞ்சாலைகள், சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், பொது போக்குவரத்து மற்றும் சமூக மையங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் இப்பகுதியில் வரும் நாட்களில் செழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையங்கள் அதிகரிப்பு; தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பின் மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. சேலம், திருச்சி போன்ற மாவட்டங்களில் விமான சேவைகள் தொடங்கப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை-சேலம் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இப்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் சென்னையில் இருந்து சேலத்திற்கு சேவையைத் தொடங்கி உள்ளது, முதல் விமானம் ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும். தினமும் காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.30 மணிக்கு சேலம் சென்றடையும்.

விமான நிலையம்: பின்னர் சேலத்தில் இருந்து மதியம் 12.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும் விமானம் 1.45 மணிக்கு இங்கு தரையிறங்கும். டிக்கெட் முன்பதிவுகளின் அடிப்படையில் நாளொன்றுக்கான சேவைகள் அதிகரிக்கப்படும் என்றும், டிக்கெட் விலை 2,390 ரூபாயிலிருந்து தொடங்கும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

திருச்சி விமானம்: தற்போது புதிய விமான சேவைகளும் திருச்சிக்கு கிடைக்க தொடங்கி உள்ளது. அதன்படி திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த சேவை மூலம் 1 மணி நேரம் 15 நிமிடத்தில் பெங்களூருக்கு செல்ல முடியும். இரவு 12.15 மணிக்கு இந்த சேவை மேற்கொள்ளப்படுகிறது.

ஒன்றரை மணிக்கு நள்ளிரவில் இந்த விமானம் பெங்களூரை அடையும். இது தினசரி சேவை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கண்ணை மூடி திறக்கும் முன் பெங்களூருக்கு எளிதாக திருச்சியில் இருந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருச்சியில் இருந்து பெருநகரங்களுக்கு தற்போது பயணம் மிக எளிதாகி உள்ளது.

திருச்சியில் தற்போது புதிய விமான நிலைய முனையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி மூலம் இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது.

தஞ்சை விமான நிலையம்: இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் எப்படி இருக்கும் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

சென்னை, திருச்சி, கோவைக்கு இணையாக இனிமேல் தஞ்சாவூரிலும் விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

அதில், தஞ்சையில் விரைவில் விமான போக்குவரத்து செயல்படுத்தப்படும். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் டெல்டா மாவட்டங்களுக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இங்கே பல நிறுவனங்கள் குவிய தொடங்கி உள்ளன. டெல்டா மாவட்டங்களை ஸ்டார்ட் அப் ஹப்பாக மாற்றும் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.

அமைச்சர் சொன்னது என்ன?: ஐடி பார்க் இங்கே வருகின்றன. இதனால் விவசாய மக்களுக்கு பாதிப்பு இல்லை. இங்கே உள்ள இளைஞர்கள், இளைஞிகள் பலன் அடைவார்கள். அதேபோல் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை இங்கே கொண்டு வரப்படும். மாசை ஏற்படுத்தாத தொழிற்பேட்டைகள் இங்கே கொண்டு வரப்படும்.

எந்த மாசும் இல்லாத தொழிற்பேட்டைகள் கொண்டு வரப்படும். தஞ்சைக்கு விமானம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது அரசின் பல ஆண்டு கனவு. இதற்காக விரைவில் அறிவிப்புகள் கொண்டு வரப்படும். ஒரு காலத்தில் இங்கே விமான சேவை இருந்தது. இந்த நிலையில் தற்போது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+