காட்பாடிக்கு அப் அண்ட் டவுன் ரயில் பயணம்! முதல்வர் ஸ்டாலினின் முதல் கள ஆய்வு! 2 நாள் டூர் சார்ட்!
வேலூர்: கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்து அதன் கீழ் வேலூர் மண்டலத்தில் 2 நாள் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் காட்பாடிக்கு ரயில் மூலம் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
அரசின் அறிவிப்புகள், திட்டங்கள், சலுகைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைகிறதா என்பதை அறியவும் ஆட்சியின் பலன்களை எத்தனை பேர் அனுபவிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவும் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்.
முதல்வர் ஸ்டாலினின் 2 நாள் பயண விவரம் வருமாறு;

ரயில் பயணம்
இன்று காலை 10.20க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் நண்பகல் 12.30க்கு காட்பாடி சென்றடைகிறார்.காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து நேராக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அதன் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
இன்று மாலை 5 மணியளவில் விஐடி பல்கலைக்கழகத்துக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு கருணாநிதி பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதி கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.பிறகு மாலை 6.15 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், ஒன்றரை மணி நேரம் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவார்.

துரைமுருகன் இல்லம்
பிறகு விடுதிக்கு திரும்பும் முதல்வர் ஸ்டாலின் இரவு வேலூரிலேயே தங்குகிறார். அதன் பிறகு நாளை காலை 10.30 மணிக்கு மீண்டும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் 12 மணி வரை ஆய்வு மேற்கொள்கிறார்.அந்த ஆய்வு முடிந்ததும் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் இல்லத்துக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு மதிய உணவு சாப்பிடுகிறார்.

சென்னை ரிடர்ன்
அதன் பிறகு தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை மாலை 6.30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து தன்பத் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை திரும்புகிறார். இதனிடையே முதல்வரின் பயண ரூட் முதலில் சாலை மார்க்கமாக திட்டமிடப்பட்டு பிறகு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் ரயில் பயணமாக மாற்றப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications