என் மகன் கதிர் ஆனந்தை லாரி ஏற்றி கொல்லவும் சதி நடந்தது.. துரைமுருகன் பகீர் தகவல்
Recommended Video
ஆம்பூர்: வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலில் போட்டியிடும் தனது மகன் கதிர் ஆனந்தின் வேட்பு மனுவை நிராகரிக்க செய்ய, சிலர் சதி செய்து வருகின்றனர் என திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ள வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலை முன்னிட்டு, ஆம்பூரில் திமுக தேர்தல் அலுவலகத்தை துரைமுருகன் திறந்து வைத்தார். தொடர்ந்து திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அரக்கோணம் தொகுதி எம்.பி ஜெகத்ரட்சகன், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், கடந்த முறை வேலூர் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, எனது வீட்டில் வருமான வரி சோதனை நடத்த யார் உத்தரவிட்டார்களோ அவர்கள் தான் தொடர்ந்து சதி வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
மேலும் என் வீட்டுத் தோட்டத்தில் பணத்தை பதுக்கி வைத்தவர்கள் யாரென்பதும் எனக்கு தெரியும். அதே போல என் வீட்டில் சோதனை செய்வதற்காக ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்தது யார், என் மகனை லாரி ஏற்றி கொலை செய்ய சொன்னது யார் என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி கண்ணீர் மல்க பேசினார் துரைமுருகன்.
இத்தனை சதிகளுக்கும் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். துரோகத்தை மட்டுமே செய்யும் சிலரால் இந்த சதி வேலைகள் நடத்தப்பட்டு வருகின்றன என சாடினார் துரைமுருகன்.
எனது உயிர் போகும் வரை நான் திமுக கட்சியில் தான் இருப்பேன் என மிக உணர்ச்சிகரமாக பேசினார். மேலும் என் உதிரத்தில் தோன்றிய என் மகனும் கடைசி வரை திமுக-வில் தான் இருப்பான், கட்சிக்காகவே உழைப்பான் என கூறி பேச்சை நிறைவு செய்தார்.
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications