Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூரில் கடலில் கார் ஓட்டிய ஆசாமி.. இப்ப ஏலகிரி ஏரியில் அதிர்ச்சி.. தடதட திருப்பத்தூர் ஜோலார்பேட்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூகுள் மேப் மூலமாக வழி தவறி சென்றதால், ஏரிக்குள், கடலில் வாகனங்கள் பாய்ந்து பலரும் விபத்துக்களை சிக்கி வரும் சம்பவம் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது.. ஆனால், கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து திடீரென ஏரிக்குள் புகுந்துள்ளது.. அந்த காரில் 5 பேர் பயணித்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டமே பெரும் அதிர்ச்சிக்குள்ளானது.. காரில் பயணம் செய்த அந்த 5 பேரின் நிலை என்ன?

இன்று உலகம் முழுவதும் பயணிகளுக்கு வழிகாட்டும் செயலியாக கூகுள் மேப் விளங்கி வருகிறது.. பெரிய நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கூகுள் மேப்பில் இல்லாத இடங்களே இல்லை எனலாம்.

Tirupattur Jolarpet Yelagiri

கடைகள், சுற்றுலா தளங்கள், வழித்தடங்கள் உள்பட நமக்கு என்னென்ன வேண்டுமோ, அத்தனை இடங்களையும் கூகுள் மேப் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.. அந்தவகையில், பலருக்கும் இந்த கூகுள் மேப் பேருதவியாக இருந்து வருகிறது.

ஜிபிஎஸ் ரூட்

ஆனால், சிலசமயம் இந்த மேப்பை நம்பி தவறான வழிகளுக்கும் பயணிகள் சென்றுவிட நேர்ந்து அவதிக்கு ஆளாக நேரிடுகிறது.. சிலசமயம், ஏரி, ஆறுகளில் விழுந்து உயிரிழப்புகளும் நடந்துவிடுகின்றன..

இப்படித்தான் 15 நாட்களுக்கு முன்பு, கடலூரில் ஒரு சம்பவம் நடந்தது.. சென்னையை சேர்ந்த 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உட்பட 5 பேர் கடல் வழியாக பயணம் செய்துள்ளனர்.. சம்பவத்தன்று விடிகாலை அதிகாலை கடலூர் துறைமுகத்தில் இருந்து பரங்கிப்பேட்டை வரை கடற்கரையோரமுள்ள சாலையை பயன்படுத்தி கூகுள் மேப் மூலமாக பயணம் செய்தனர்.

கடலூரில் கடலில் கார் ஓட்டி

அப்போது காரில் பயணித்த இளைஞர்கள் மதுபோதையில் இருந்திருக்கிறார்கள்.. கடலூர் சொத்திக்குப்பம் பகுதிக்கு வந்தபோது, திடீரென அவர்களது கார் கடலை நோக்கி சென்றது.. கார் கடலில் இறங்கியதுகூட அவர்களுக்கு தெரியாத அளவுக்கு போதையில் இறந்தனர்.. கடலுக்குள் சென்ற கார் பாதியிலே நின்றது.

கடலில் கார் செல்வதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக இறங்கி 5 பேரையும் பத்திரமாக மீட்டனர்.. அத்துடன் கடற்கரை ஓரம் யாரும் பயணிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு கடற்கரை போலீசாரும் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.

ஏலகிரி ஏரிக்குள் கார்

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள பக்கிரிதக்கா என்ற பகுதியில் 55 வயது ராஜா என்பவர் வசித்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் காளியம்மாள்..

சம்பவத்தன்று இந்த தம்பதியும், மகள் நந்தினி, மருமகன் அரவிந்த், உறவினர் மகள் 8 வயது சிறுமி என 5 பேரும் ஏலகிரி மலைக்கு சென்றுள்ளனர்.. அரவிந்த்துக்கு சொந்தமான காரில் ஜோலார்பேட்டையில் இருந்து ஏலகிரி மலை கிராமத்திற்கு சென்றிருக்கிறார்கள்.. காரை அரவிந்த் ஓட்டி வந்துள்ளார்.

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை

ஏலகிரியில் உள்ள ஏரிக்கரையின் மீது கார் சென்று கொண்டிருந்தது.. அப்போது மழை காரணமாக ஏரியில் நீர் நிரம்பி இருந்தது... காரை அரவிந்த் ஓட்டி வந்த நிலையில், திடீரென கார் நிலைத்தடுமாறி ஏரிக்குள் பாய்ந்தது... ஏற்கனவே ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததால், கார் மூழ்க துவங்கியது..

கார் கண்ணாடி வரை தண்ணீரில் மூழ்கி கொண்டிருப்பதை பார்த்த காரில் இருந்தவர்கள் அலறினார்கள்.. உடனே அரவிந்த், கதவை திறந்துகொண்டு வெளியே பவந்து, மனைவி, குழந்தையை காப்பாற்றி கரை சேர்த்தார்.. பிறகு மாமனார், மாமியாரையும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார்.. எனினும், மாமனார் ராஜா இதில் படுகாயமடைந்தார்.

கார் கண்ணாடி வரை தண்ணீர்

ஏரியில் கார் மூழ்கி குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி வரவழைத்தனர்... இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 5 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. 5 பேருக்குமே தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

ஏரி தண்ணீரில் கார் மூழ்கி கொண்டிருந்தபோதே, அரவிந்த் அங்கிருந்து தப்பித்ததுடன், மற்ற 4 பேரையும் துரிதமாக காப்பாற்றி கரை சேர்த்ததால், அதிர்ஷ்டவசமாக அனைவருமே உயிர் பிழைத்துள்ளனர்.. இந்த சம்பவம் ஜோலார்பேட்டையில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+