Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சின்ன மாமியார்" மேரியிடம் "கவிழ்ந்த" மாப்பிள்ளை.. அதுவும் மனைவி கண்ணெதிரிலேயே.. வெலவெலத்த வேலூர்

சின்ன மாமியாருடன் தகாத உறவு வைத்துள்ளதாக மனைவி புகார் கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: சின்ன மாமியார் என்றும் பாராமல் மேரியுடன் உறவு வைத்துள்ளார் மருமகன்.. இந்த விஷயம் தெரிந்து, கொந்தளித்துபோய், போலீஸ் ஸ்டேஷன் படிக்கட்டுகளை ஏறிஇறங்கி வருகிறார் பரிதாப மனைவி.

மாமியார் மருமகள் உறவு வலுவாக அமைந்தாலே அந்த குடும்பமே ஆரோக்கியமாக தழைத்து வளரும்.. மாமியார் மருமகள் என்பவர்கள், அம்மா பெண் போல அல்லது நல்ல தோழியாக இருந்தால் அதைவிட சிறப்பு வேறு இருக்க முடியாது.

இதேபோலத்தான் மாமியார் - மருமகன் உறவும்.. இன்னொரு தாயாக மாமியாரை பாவிக்கும் மருமகன்கள் கிடைப்பதும், இன்னொரு மகனாக மருமகனை அரவணைக்கும் மாமியார் கிடைப்பதும் அபூர்வம்தான்.

மருமகள்

மருமகள்

சில சமயம், இந்த உறவுமுறைகளில் ஏற்படும் சிக்கலே, வன்முறைகளுக்கும், குடும்பம் சிதைவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது... மாமியார் - மருமகன் உறவு தொடர்பான சில விநோத சம்பவங்கள் நம் நாட்டிலேயே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்திலும் ஆச்சரிய நிகழ்வு ஒன்று நடந்தது.. அந்த இளம் தம்பதிக்கு ஐந்து வருடமாக குழந்தை பாக்கியமே இல்லை.. ஒரு குழந்தை பிறக்காதா என்று ஏங்கியபடிட கோயில் குளமாக சுற்றினார்கள்.. இந்த நிலையில் ஒருநாள் அந்த கணவர், திடீரென ஒரு குழந்தையுடன் வீட்டுக்கு வந்துள்ளார்..

 மாமியார்

மாமியார்

குழந்தை யாருடையது என்று மனைவி கேட்டதற்கு, இந்தக் குழந்தையை தத்தெடுத்துவிட்டேன் என்று கணவர் சொல்லி உள்ளார். கடைசியில் பார்த்தால், அந்த குழந்தை இந்த கணவருக்கு பிறந்ததுதான்.. அம்மா யாரு தெரியுமா? அந்த கணவரின் மாமியார்தான்!.. அதாவது மாமியாருக்கும், மருமகனுக்கும் இடையே எப்படியோ கனெக்ஷன் ஆகி, மாமியார் வயிற்றில் கரு வந்து விட்டது.. ஆனால் மருமகனுக்கு அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க ஆசை.. மாமியாரும் ஒத்துக் கொண்டார். இதையடுத்து மாமியாரை யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் தங்க வைத்தார். பிரசவமும் நல்லபடியாக நடந்தது. அழகான குழந்தையும் பிறந்தது. இந்த சம்பவம் உபியில் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் அப்போது ஏற்படுத்தியிருந்ததை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன..

 வெலவெல வேலூர்

வெலவெல வேலூர்

இதோ நம்ம வேலூரிலும் ஒரு பஞ்சாயத்து வெடித்துள்ளது.. ஊசூர் பகுதியை சேர்ந்த தம்பதி ராஜேஷ்குமார் - அனுசுயா... இந்தத் தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகன், 11 வயதில் ஒரு மகள் இருக்கின்றனர்... ராஜேஷ்குமாருக்கு குடிப்பழக்கம் இருக்கிறதாம்.. தண்ணி அடித்துவிட்டு வந்தால், சிலசமயம் வாசலிலேயே குப்புற விழுந்துவிடுவாராம்.. அப்படித்தான் ஒருநாள் கணவரை தூக்கிவிட அனுசுயா சென்றபோது, யதேச்சையாக ராஜேஷ்குமார் செல்போன் அனுசுயா கண்ணில் பட்டுள்ளது.. அதில், தன்னுடைய சித்தி மேரியுடன், ராஜேஷ்குமார் பேசும் ஆடியோ ஒன்றும் இருந்துள்ளது..

 கள்ள உறவு

கள்ள உறவு

அந்த ஆடியோவை கேட்டு அனுசுயா அதிர்ந்து போயுள்ளார்.. காரணம், இருவரும் ஆபாசமாகவும், அன்னியோன்யமாகவும் பேசியிருக்கிறார்கள்.. மேலும் அனுசுயாவை கொலை செய்யவும் இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டியிருந்ததும் அந்த ஆடியோவில் பதிவாகி இருந்தது.. இதனால் ஆத்திரமடைந்த அனுசுயா, வீட்டில் பெரியவர்களிடம் அந்த ஆடியோவை போட்டுக்காட்டி உள்ளார்.. குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்து, ராஜேஷ்குமாரை கண்டித்துள்ளனர்.. ஆனால், வீட்டில் எல்லாருக்கும் விஷயம் தெரிந்துவிட்டதால், ராஜேஷ்குமாருக்கு இது இன்னும் வசதியாக போய்விட்டது.. ரகசியமாக சந்திப்பது போய், மேரியை பகிரங்கமாக சந்தித்தார்..

 ஒட்டுத்துணி

ஒட்டுத்துணி

அனுசுயா கண்ணெதிரிலேயே, மேரியும் ராஜேஷ்குமாரும், உடம்பில் துணி இல்லாமல் நெருக்கமாக இருந்துள்ளனர்.. இதற்கு மேல் பொறுமையிழந்த அனுசுயா, வேலூர் மகளிர் போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் ராஜேஷ்குமாரை கூப்பிட்டு கண்டித்துள்ளனர்.. ஆனால், சின்ன மாமியாரை இழக்க மனமில்லாத ராஜேஷ்குமார், கடைசியில் அவரை கோயிலில் தாலி கட்டி, 2வது திருமணம் செய்து கொண்டுவிட்டார்.. இதனால் மேலும் அதிர்ந்துபோன அனுசுயா, அரியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார்களை தந்தார்.. எத்தனையோ முறை புகார்கள் தந்தும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று அனுசுயா கண்ணீர் வடிக்கிறார்..

 சின்ன மாமியார்

சின்ன மாமியார்

அதுமட்டுமல்ல, உன் சித்திகூட அட்ஜஸ்ட் பண்ணி சேர்ந்து வாழுன்னு சொல்றார். பிள்ளைகளிடமும், சித்தியை, "பாட்டின்னு கூப்பிடாதீங்க. பெரியம்மான்னு கூப்பிடுங்க"ன்னு சொல்லி தருகிறார் என்று கதறி அழுகிறாராம் அனுசுயா.. ஆனால், அனுசுயாவின் குற்றச்சாட்டை ராஜேஷ்குமார் மறுக்கிறாராம்.. "சின்ன மாமியாரை கல்யாணம் செய்து கொண்டது உண்மைதான்.. ஆனால், முறைப்படி அனுசுயாவை கோர்ட் மூலம் விவாகரத்து செய்துவிட்டேன்.. வழக்கு விசாரணையின்போது, அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை... அதனால், அறிவிப்பு வெளியிட்டு நீதிமன்றமும் விவகாரத்து வழங்கிவிட்டது..

சித்தி அட்ஜஸ்ட்

சித்தி அட்ஜஸ்ட்

ஆனால், இது தெரியாமல் எல்லா இடங்களிலும் என்னை பற்றிபுகார் தந்து வருகிறாள்..போலீஸாரும் என்மீது புதுசு புதுசா கேஸ் போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.. இப்போதுகூட முன்ஜாமீன் வாங்கி கொண்டுதான் வெளியில் இருக்கிறேன். நானும் அவள்மீது முதலமைச்சரின் தனிப் பிரிவுக்குப் புகார் அனுப்பியிருக்கிறேன்'' என்கிறாராம்.. இதில் யார் சொல்வது உண்மை என்று தெரியாவிட்டாலும், இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.. இரு தரப்பிலுமே புகார்களும், குற்றச்சாட்டுகளும் மாறி மாறி வெடித்து கிளம்பி உள்ளது, ஓசூர் மக்களை திகைக்க வைத்து வருகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+