Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோதாவில் குதித்த திமுகவினர்.. அயோத்தி சாமியார் பொம்மை எரியுதே! உதயநிதி தலையை வெட்ட சொன்னதால் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டினால் ரூ.10 கோடி பரிசு வழங்குவேன் என அறிவித்த அயோத்தி சாமியாரின் உருவ பொம்மையை எரித்து வேலூர் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.

 DMK fired effigy of Ayodhya priest who announced price for Udhayanidhi stalin head

இந்த நிகழ்வில், பேசிய உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை கடுமையாக விமர்சித்து பேசினார். "சனாதானம் என்பது கொசு, டெங்கு, ஃப்ளூ, மலேரியா போன்ற நோய் என்றும் அதை அழிக்க வேண்டும்." என்று அவர் சாடினார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்த அவர், "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ற புத்தகத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்கள்.

விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப்பெரிய அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அப்படி என்னதான் பங்களிப்பு செய்தார்கள் என்று திறந்து பார்த்தோம். முதல் பக்கத்திலேயே ஆங்கிலேயர் காலணியை நாவால் வருடுகிற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

அடுத்து காந்தியார் கொலையை குறிக்கின்ற வகையிலான சித்திரம் வந்தது. அடுத்தடுத்த பக்கங்கள் அனைத்தும் காலியாக இருந்தன. ஏனென்று கேட்ட போது, நீங்களும் அந்த வரலாற்றை நிரப்பலாம் என்று கையில் பேனாவைத் தந்தார்கள். மூன்று பெரிய பூஜ்ஜியங்களை வரைந்தோம். இப்படிப்பட்ட பூஜ்ய வரலாற்றைக் கொண்ட சனாதனவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்திய த.மு.எ.க.ச தோழர்களுக்கு வாழ்த்துகள்.

தேர்தல் களத்தில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி சனாதனத்தை ஒழிப்போம்." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியதை வைத்து, அவர் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்ததாக சமூக வலைதளங்களில் இந்துத்துவாவினர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு உள்ளன. மத்திய அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்களும் இதனை கண்டித்து பேசினர். இந்த நிலையில் இதனை சட்டப்படி எதிர்கொள்வதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

 DMK fired effigy of Ayodhya priest who announced price for Udhayanidhi stalin head

பெரியார், அண்ணா, கலைஞரின் வழிப்படி முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்கீழ் செயல்படுவதாகவும், காவிகளின் ட்விட்டர் பதிவுகளுக்கு அஞ்ச மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இன்றும், நாளையும், என்றும் சனாதானத்தை எதிர்த்து போராடுவேன் எனக்கூறிய அவர், இந்த எதிர்ப்பில் இருந்து சிறிதும் பின் வாங்க மாட்டேன் என உறுதியளித்தார்.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா, உதயநிதி ஸ்டாலினின் உருவப் படத்தை கத்தியால் குத்தி தீயிட்டு எரித்ததுடன், அவரது தலையை வெட்டி எடுத்து வந்தால் ரூ.10 கோடி பரிசு என்று அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், "சாமியாரான இவருக்கு எப்படி ரூ.10 கோடி கிடைக்கும்? என் தலையை சீவ 10 ரூபாய் சீப்பு போதும். ரூ.10 வேண்டாம்." என கலாய்த்தார்.

இந்த நிலையில் இன்று அதே அயோத்தி பரகாம்ச ஆச்சாரியா சாமியார் உதயநிதியின் தலையை சீவினால் ரூ.10 கோடிக்கும் அதிகமாக பணம் தருவேன் என பரிசுத் தொகையை உயர்த்தி அறிவித்தனர். அயோத்தி சாமியார் ஒழிக, சனாதனம் ஒழிக என அவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+